தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்கு உணவு இல்லாத போது


வரகு தேங்காய் வடை:
செய்முறை
வரகரிசியை ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். துருவிய தேங்காயுடன் பெருங்காயம், உப்பு, மிளகாய் மற்றும் வரகரிசியை கெட்டியாக அரைக்கவும். அதனுடன் சோள மாவு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து வைக்கவும். மாவில் தண்ணீர் கூடிவிட்டால் சிறிது சோள மாவு சேர்த்துக் கொள்ளலாம். இதனை சிறிது சிறிது வடைகளாக தட்டி எண்ணையில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும். இதற்கு வெங்காயச் சட்னி, புதினா சட்னி பொருத்தமாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்ண‌ ஏற்ற மாலை சிறுதானியப் பலகாரம்.

முழுக் கட்டுரை »


ஊனுடம்பு ஆலயம்


நகமும் நலனும் - நாச்சாள்

பிரபஞ்சத்தில் உள்ள உயிர் ஆதாரங்கள் தத்தம் இயல்போடு எளிதான உணவுடன் வாழ்க்கையை வாழ அவசியமானது நகங்கள். நகங்கள் நம் வாழ்கைச் சுழற்சியின் மூலதனம். வியப்பாக‌ இருக்கிறதா? பலர் பராமரிப்பதே இல்லை. பலர் மிகுந்த அக்கறையுடன் இரசாயன நகப்பூச்சு அணித்து அடிக்கடி வெட்டும் நகங்கள் வாழ்க்கையின் மூலதனமே. நகங்கள் உயிர் ஆதாரங்களின் அன்றாட செயல்பாட்டிற்குப் பிடிப்பைக் கொடுக்கின்றன‌ இந்தப் பிடிப்பே நாம் நம் வாழ்க்கையை எளிதாகவும், எல்லா செயல்பாடுகளையும் வேகமாகவும் செய்ய உதவுகின்றன‌. நகங்கள் இல்லை என்றால் எந்தப் பொருளையும் பிடிக்கவோ, எந்தச் செயலையும் செய்யவோ முடியாது. காரணம் நகங்களே விரல் நுனிக்கு வலுவைக் கொடுக்கின்றன‌. நகங்கள் இல்லாது இருந்தால் கை கால்கள் மிருதுவாக இருக்கும், பிடிப்பு இருக்காது. ஆக நகங்கள் வாழ்க்கையின் ஆதாரம் என்பது மிகையல்ல‌. நகங்கள் பொருளை தூக்கவோ அல்லது ஏதோ செயலை செய்யவோ மட்டும் தானா? இல்லை, இவையே நம் அக அழ(ழுக்)கையும் காட்டும் கண்ணாடி. அதாவது அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் ஆரோக்கிய நிலையை (அழகை) நம் நகங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முழுக் கட்டுரை »

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org