தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


நாகணவாய்ப் பறவை

மைனா என்று நாம் அழைக்கும் இப்பறவை Common Myna என்று ஆங்கிலத்திலும் Acridotheres tristis (linnacus) என்று அறிவியலிலும் அழைக்கப் படுகிறது. கணவனும் மனைவியும் எப்பொழுதும் ஒன்றாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும் சிறந்த பறவை “மைனா”. ஆணும், பெண்ணும் சேர்ந்து பேசிக் கொண்டே இருக்கும்.

தோற்றம்:

பழுப்பு நிற‌ம் உடல் முழுவதும், முகம், கழுத்து கருமை நிற‌மும், சிற‌குகளின் நுணியிலும், வாலிலும் கருமை நிற‌மும், சிற‌குகளின் அடியில் ஆங்காங்கே வெள்ளை நிறம், கால்கள், மூக்கு , கண் இமைகள் - மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆண், பெண் பார்ப்பதற்கு ஒரே நிறத்தில் இருக்கும் . இதன் நடையில் ஒருவித கம்பீரமும், வீரமும் இருக்கும். ..முழுக் கட்டுரை »

நீரின்றி அமையாது உலகு - பரிதி


உலகளாவிய நீர்ச் சிக்கல் - முறையான தீர்வுகள்

கோமாரி: இந்நோய் கண்ட மாடுகளுக்கு காராமணி அளவில் கொப்புளங்கள் வாய், கால்களில் தோன்றும். எனவே இதனை கால் கோமாரி என்றும் அழைப்பர். ஆங்கிலத்தில் இதனை காரணப்பெயராக 'ஃபுட் அன்ட் மவுத் டிஸீஸ்’ (Foot and Mouth Disease - FMD) என்று அழைக்கின்றனர். முற்றிய நிலையில் மூக்கு, நாக்கு, மடி, முகம் என்று எல்லா இடங்களிலும் கொப்புளங்கள் தோன்றும். தோன்றிய ஒரு நாளுக்குள் கொப்புளம் உடைந்து புண்ணாகி, அதிலிருந்து நீர் வடியும். மாடுகள் நடக்கவும், சாப்பிடவும் மிகவும் சிரமப்படும். 106 டிகிரி வரை காய்ச்சலும் ஏற்படும். வாயிலிருந்து எச்சில் கம்பி போல ஒழுக ஆரம்பிக்கும். மாடு மந்தமாக இருக்கும். சரியாக கவனிக்காமல் போனால் இரண்டு மூன்று தினங்களில் மாடுகள் இறந்து விடும் அல்லது புண்களில் புழுக்கள் தோன்றி விடும். புழுக்கள் தோன்றி விட்டால் புண்களை ஆற்றுவது மிகவும் கடினம் மட்டுமல்ல, வெகு நாட்களும் ஆகும்

முழுக் கட்டுரை »

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org