மதிப்புக் கூட்டிய பொருட்கள்
ஆசிரியர் குறிப்பு: திரு.ஜெய்சங்கர் அவர்கள் இந்த மாதக் கட்டுரையை என்னுடைய வற்புறுத்தலின் பேரிலேயே எழுதுகிறார். ' மாட்டுப் பண்ணை வைத்தால் மாடு உற்பத்தி பண்ண வேண்டும்; பால் அல்ல' என்ற நம்மாழ்வாரின் ஞானத்தை முதல் கட்டுரையில் வெளியிட்டு விட்டுப் பின்னர் பால் மற்றும் மதிப்புக் கூட்டிய பொருட்கள் என்ற வியாபார நோக்கில் எழுதுவது என்ன நேர்மை என்பது அவரது நியாயமான கேள்வி. எனினும், உழவன் விடுதலை - குறிப்பாக உழவனின் பொருளாதாரத் தற்சார்பு என்பது தாளாண்மையின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. சந்தைத் தற்சார்பு வந்தால் பின் எல்லாத் தற்சார்பும் தானே வந்துவிடும் என்பது நடைமுறை நிதர்சனம். 'மாடல்ல மற்றையவை' தொடர் மாடு வளர்த்துப் பராமரிக்கும் அனைவருக்கும் பயனுள்ள ஒரு முழுமையான கையேடாக வியங்க வேண்டும் என்பது நம் அவா. மேலும் கிராமத்து வாழ்வாதாரங்களை உருவாக்குவதும் பாதுகாப்பதும் காந்தி கூறிய கிராம சுயராச்சியத்திற்கும், குமரப்பா திட்டமிட்ட நிலைத்த பொருளியலுக்கும் இன்றியமையாதது. எனவே மாடு வளர்ப்பதைச் சிறுதொழிலாக்க விரும்புவோரின் பொருளாதாரத்தை மனதில் இருத்தி இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. இதில் உள்ள கருத்துக்களை அவரவர் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும். வேளாண்மையைப் போல் கால்நடை வளர்ப்பும் அவ்வச் சூழலுக்கு ஏற்றதாய்க் கைக்கொள்ள வேண்டும்...
முழுக் கட்டுரை »
நம்மாழ்வாரும் கிராம சுயராச்சியமும் - பசுமை வெங்கிடாசலம்
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் இளங்காடு கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் நம்மாழ்வார் பிறந்தார். அண்ணாமலை பல்கலைகழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் இணைந்துள்ள கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி பண்ணையில் வேளையில் அமர்த்தப்பட்டவர். பதவி உயர்வு பெற்று மேலாளராக பணிபுரிந்தார். அங்கு ஏழு வருடங்கள் வேலை செய்துள்ளார். அதில் அவர் செய்த விவசாய பயிர்களின் ஆராய்ச்சியில் வரவை விட செலவு அதிகமாக இருப்பதை உணர்ந்தார். அதன் அடிப்படையில் செய்யப்படும் பயிர்கள் ஒரு விவசாயிக்கும் இலாபத்தை கொடுக்காது என்பதை உணர்ந்து தனது வேலையை விட்டு விலகி தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமத்தில் ஒரு கிருஸ்துவ மத அமைப்பில் தங்கி கிராம மக்களுடன் விவசாய பணியை செய்கிறார். அங்குள்ள கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலால் அங்கிருந்து வெளியேறி நெதர்லாந்து நாட்டின் டொமினிக் பியரின் (நோபல் பரிசு பெற்ற பங்குத்தந்தை) இந்திய இயக்கத்தில் சேர்ந்து அங்கு பல ஆண்டுகள் பணியாற்றுகிறார். அந்த அமைப்பு செய்த பல உதவிகளை பெற்ற அந்த பகுதி மக்களும் விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் அடைகின்றனர். அந்த சமயத்தில் பாண்டிச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் நடைபெற்ற 'மனிதனும் உயிர்ச்சூழலும்' என்ற கருத்தரங்குக்கு சென்று அதில் கலந்து கொள்கிறார். அந்த கருத்தரங்கில்தான் அவர் இயற்கை விவசாயம் எனும் சூழலியல் விவசாய முறை பற்றி அறிந்து அதைப்பற்றி பல கருத்தரங்கங்கள் மூலமும், தனிப்பட்ட நபர்கள் மூலமும் விவசாயம் என்பது இயற்கையுடன் இணைந்து தனது தேவைகளை அடைவதற்காக செய்யப்படும்போதுதான் அது லாபகரமாக இருக்கும் என்பதை உணர்கிறார்... முழுக் கட்டுரை »