தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி

நாகணவாய்ப் பறவை

மைனா என்று நாம் அழைக்கும் இப்பறவை Common Myna என்று ஆங்கிலத்திலும் Acridotheres tristis (linnacus) என்று அறிவியலிலும் அழைக்கப் படுகிறது. கணவனும் மனைவியும் எப்பொழுதும் ஒன்றாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும் சிறந்த பறவை “மைனா”. ஆணும், பெண்ணும் சேர்ந்து பேசிக் கொண்டே இருக்கும்.

தோற்றம்:

பழுப்பு நிற‌ம் உடல் முழுவதும், முகம், கழுத்து கருமை நிற‌மும், சிற‌குகளின் நுணியிலும், வாலிலும் கருமை நிற‌மும், சிற‌குகளின் அடியில் ஆங்காங்கே வெள்ளை நிறம், கால்கள், மூக்கு , கண் இமைகள் - மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆண், பெண் பார்ப்பதற்கு ஒரே நிறத்தில் இருக்கும் . இதன் நடையில் ஒருவித கம்பீரமும், வீரமும் இருக்கும்.

காணும் இடம்

ஆசிய கண்டம் முழுவதிலும் இவற்றைக் காணலாம். 1863ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலும், 1870ஆம் ஆண்டு நியூசிலாந்திலும், 1902ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் இவற்றை அறிமுகம் செய்யப்பட்டது. நம் மனிர்களால் வயல்களில், சிறிய காடுகளில், பூங்காவனத்தில் காடுகளிலும் இவற்றை அதிகமாக காணலாம். உணவு

மனிதர்களுடன் அதிகம் வாழ்வதால், மனிதன் எவற்றையெல்லாம் உண்பானோ அவற்றை எல்லாம் உண்ணும். அவ்வப்பொழுது மற்ற பறவைகள் போல் பழங்கள், பூச்சிகள், பல்லிகளை உண்ணும். வெட்டுக்கிளி தான் இதற்கு மசால் தோசை!

இனப்பெருக்கம்

ஆண் பெண்ணின் ஒற்றுமை அதிகம். 50-50 என்றால் அவைதான். கூட்டை கட்டுவது முதல் இரைதேடும் இடம் ஆகியவற்றை ஒன்றுகூடி பேசி முடிவெடுக்கும். இரண்டு கூடுகள் கட்டும். ஒன்று வருடம் முழுவதம் வசிப்பதற்கு மற்றொன்று இனப்பெருக்த்திற்கு! 3-5 முட்டைகள் இடும். முட்டைகள் பச்சை கலந்த நீல நிறத்தில் இருக்கும் . அடைக்காப்பது 11-18 நாட்கள். மூன்று முதல் நான்கு வாரத்திற்கு குஞ்சுகள் முழுமையாக வளர்ந்து விடும். ஆண் பறவை காவல் காப்பதில் சிறந்தது. தன் குஞ்சுகளை பறக்க கற்று கொடுத்து சிறந்த தந்தையாக விளங்கும்.

சிறப்பு செய்தி

மிகச் சிறந்த பல்குரல் வல்லுனர் இப்பறவை. சுமார் 170 வகையான ஒலிகளைக் காப்பியடிக்கும்.

கூண்டுப் பறவையாக வளர்த்துப் பேசக் கற்று கொடுத்து வளர்ப்பர் சிலர்.

வடமொழி இலக்கியங்களில் சாரிகா என்றும், கலஹப்பிரியா என்றும் பெயர் உண்டு.

மிகவும் ஊடுருவும் இனம் (invasive species) என்று தவறாகப் பெயர் பெற்றுள்ளது என்பதே என் கருத்து. இயற்கை எதிரிகள் இல்லாத சூழலில் இவற்றை அறிமுகப் படுத்திவிட்டு ஊடுருவுகிறது என்பது மனிதர்களின் அறியாமையே அன்றி இப்பறவையின் தவறல்ல.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org