தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

ஊனுடம்பு ஆலயம்


நகமும் நலனும் - நாச்சாள்

பிரபஞ்சத்தில் உள்ள உயிர் ஆதாரங்கள் தத்தம் இயல்போடு எளிதான உணவுடன் வாழ்க்கையை வாழ அவசியமானது நகங்கள். நகங்கள் நம் வாழ்கைச் சுழற்சியின் மூலதனம். வியப்பாக‌ இருக்கிறதா? பலர் பராமரிப்பதே இல்லை. பலர் மிகுந்த அக்கறையுடன் இரசாயன நகப்பூச்சு அணித்து அடிக்கடி வெட்டும் நகங்கள் வாழ்க்கையின் மூலதனமே. நகங்கள் உயிர் ஆதாரங்களின் அன்றாட செயல்பாட்டிற்குப் பிடிப்பைக் கொடுக்கின்றன‌ இந்தப் பிடிப்பே நாம் நம் வாழ்க்கையை எளிதாகவும், எல்லா செயல்பாடுகளையும் வேகமாகவும் செய்ய உதவுகின்றன‌. நகங்கள் இல்லை என்றால் எந்தப் பொருளையும் பிடிக்கவோ, எந்தச் செயலையும் செய்யவோ முடியாது. காரணம் நகங்களே விரல் நுனிக்கு வலுவைக் கொடுக்கின்றன‌. நகங்கள் இல்லாது இருந்தால் கை கால்கள் மிருதுவாக இருக்கும், பிடிப்பு இருக்காது. ஆக நகங்கள் வாழ்க்கையின் ஆதாரம் என்பது மிகையல்ல‌.

நகங்கள் பொருளை தூக்கவோ அல்லது ஏதோ செயலை செய்யவோ மட்டும் தானா? இல்லை, இவையே நம் அக அழ(ழுக்)கையும் காட்டும் கண்ணாடி. அதாவது அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் ஆரோக்கிய நிலையை (அழகை) நம் நகங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நகங்கள் மற்றும் நகத்தை சுற்றி இருக்கும் நகப் படுகையின் மூலம் ஒருவரது உடல் ரீதியான அனைத்து பிரச்சனைகளையும், நோய்களையும் கண்டறியலாம். தீவிர நோய்கள் முதல் நாள்பட்ட வியாதி வரை அனைத்தையும் இவை பிரதிபலிக்கிறது. உடல் மட்டும் இல்லாது மன அழகையும் பளிச்சென்று வெளிப்படுத்துபவை நம் நகங்கள்.

எப்போதும் அதிக கோபத்துடனும் கொந்தளிப்புடனும் கவலையுடனும் இருப்பவர்களின் விரல்களில் நகம் இருப்பதில்லை. நகத்திற்குப் பதிலாக சிவப்பேறிய சதையே உள்ளது. மன அழுத்தம், கவலை உள்ளவர்களின் விரல்களிலும் நகம் இருப்பதில்லை. அமைதியானவர்களின் விரல் நகங்கள் அளவோடு சீராக்கியதாக இருக்கும். அழகியல் உணர்வு உள்ளவர்களின் நகங்கள் நேர்த்தியாக திருத்தப்பெற்றும் இருக்கும். இவ்வாறு நகங்கள் மனதையும் வெளிப்படுத்துகின்றன‌.

நகங்களின் அமைப்பு

விரல் நுனிகளில் உள்ள பல நரம்பு கூட்டங்களைப் பாதுகாக்கும் விதமாக நகங்கள் உள்ளன‌. இவை கெரட்டின் என்ற புரதத்தால் ஆன பகுதி. சுண்ணாம்பு, பாஸ்பரஸ், புரதம் ஆகியவற்றால் ஆனது.

நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் தன்மைக் கொண்டன‌. வெளிப்புறம் இருக்கும் நகங்கள் கழிவுப் பொருள் என்பதால் அதற்குப் பிராண வாயு தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கியூடிகிள் போன்ற பாகங்களுக்குப் பிராண வாயு அவசியம். எனவே அவை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கின்ற‌ன‌.

ஆரோக்கியமான நகம் என்பது பளபளப்பாகவும், மிருதுவாகவும், இளஞ்சிவப்பு நிறத்தில் வட்டமாகவும் இருக்கும்.

நகப்படுகை

நகப்படுகை என்பது விரல் நுனியில் உள்ள நகத்தின் அடிப்பகுதியாகும். இவை பல நுண்ணிய நரம்புகளின் கூடாரம். இவற்றின் அடியில் உள்ள இரத்த ஓட்டத்தின் மூலம் தோலின் ஏற்படும் நிறமாற்றம், அளவு ஆகியவற்றினால் ஒருவரது நாள்பட்ட நோய்களையும் துல்லியமாக கணிக்க முடியும்.

நகச்சுத்து

நகச்சுத்து எனப்படும் நகச்சொத்தை, ஏற்படக்காரணம் நகக்கண்களில் அழுக்கு சேர்வதால் என்றால் பொருந்தும். முக்கியமாக நகத்தின் உயிராக இருக்கக் கூடிய ஓரப்பகுதி நகங்களைக் கடித்து இரத்தக் களறி ஆக்குவதாலும் புண் ஏற்படும். நகப்படுகையில் கசியும் இரத்தம் நகத்தட்டுக்கு அடியில் அதாவது நகத்தின் உட்புறச் சதையில் தங்கி விடும். இது நாளடைவில் சீழ் பிடித்து நகச்சொத்தையாக மாறிவிடுகின்றது.

நகச்சுத்து நீண்ட நாட்களாகத் தொடர் தொந்தரவு கொடுப்பது, திடீர் தொந்தரவு கொடுப்பது என்று இரண்டு வகை விருந்தாளிகளாகச் செயல் படுகிறது இந்த திடீர் நகச்சுத்து நகக்கண்களில் அழுக்கு சேர்தல், நகத்தை வேரோடு கடித்துத் துப்புதல், ஏதேனும் காயம் ஏற்படுவது ஆகிய, நாம் நகத்திற்குத் தரும் தொந்தரவினால் ஏற்படுகின்றது.

நகங்களின் வெளிப்பாடு

நாம் அதிகமாக உட்கொள்ளும் உலோகங்களும் நச்சுப் பொருள்களும்கூட உடலால் வெளியேற்றப்பட்டு, நகத்தால் சேமித்து வைக்கப் படுகின்றன. விரல் நுனிகளை வெப்பத்திலிருந்தும், குளிர்ச்சியிலிருந்தும் பாதுகாப்பவை இவையே. சிலருக்கு நகங்கள் அடிக்கடி உடைந்து போகும். இதற்குக் காரணம் அன்றாடம் பயன் பயன்படுத்தும் இரசாயனம் கலந்த சோப்புகள். போதிய நீர்ச்சத்து இன்மையாலும் நகம் உடைதல் ஏற்படலாம்.

புகைப் பழக்கம் உள்ளவர்களின் நகம் பழுப்பாகவும் மதுப்பழக்கம் உள்ளவர்களின் நகம் கருப்பாகவும் இருக்கும்.

நகங்கள் உடைசலாக வளர்ந்தால், மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது. சிறுநீரக பிரச்சினை, தைராய்ட் நோய் போன்றவற்றின் அறிகுறியாகவும் இது கருதப்படுகிறது.

நகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால் உடம்பில் பிராணவாயு பற்றாக்குறை என்று அர்த்தம். இதைக் கவனிக்காவிட்டால் நுரையீரல் சம்மந்தமான நோய்கள் வரும்.

மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. நகங்கள் வெளிறி இருந்தால் இரத்தசோகை, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருக்கலாம். நகங்கள் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அடையாளம். கீறல்- குழிகள் விழுந்தால் சரும பிரச்சினைகள் .

நீலநிறமாக மாறிவிட்டால் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறி ஆஸ்துமா, இதயநோய்களைக் கொண்டு வரலாம், இதயம் பலவீனமாக இருப்பதாகப் பொருள்.

நகங்கள் உள்நோக்கிக் குழிந்திருந்தால் அல்லது கருமை நிறமாகக் காணப்பட்டால் இரும்புச்சத்து, விட்டமின்-B 12 பற்றாக்குறை என்று பொருள்.

மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி, ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.

லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.

நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் இரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

[கல்லீரல் பாதிப்பையும் , காமாலையையும் காட்டும் வெளுத்த நகங்கள்]

கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.

கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்.

கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்.

நக‌ச்சொ‌த்தை ஏ‌ற்பட, நக‌த்‌தி‌ல் ‌மு‌ன்பு எ‌ப்போதாவது ஏ‌ற்ப‌ட்ட காய‌ம் காரணமாக இரு‌க்கலா‌ம். ‌விர‌லி‌ல் அடிபடுவது, இடு‌க்‌கி‌ல் கை‌விர‌ல் ‌சி‌க்‌கி‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பா‌ல் நக‌ப்படு‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌க் க‌சிவானது, நக‌த் த‌ட்டு‌க்கு அடி‌யி‌ல் த‌ங்‌கி‌விடு‌ம். இதனா‌ல் நக‌ச் சொ‌‌த்தை ஏ‌ற்படு‌கிறது. ‌இ‌ந்த நக‌ச்சொ‌த்தை தானாக ச‌ரியாகவு‌ம் வா‌ய்‌ப்பு‌ள்ளது. ஆனா‌ல் நக‌‌ச்சொ‌த்தை ‌தீ‌விரமடை‌ந்து, நக‌ப் பகு‌தி‌யி‌ல் வ‌லி ஏ‌ற்படுமா‌யி‌ன், நக‌த்தை ‌பிடு‌ங்க‌ி‌வி‌ட்டு அ‌ப்பகு‌தியை சு‌த்த‌ம் செ‌ய்ய வே‌ண்டியது அவ‌சியமாகு‌ம்.

மருதாணி இலை

மருதாணி இலை கிருமி நாசினி. கண்ணுக்குப் புலப்படாத பல கிருமிகளை அழிக்க வல்லது. மருதாணி இலைகளை நீர் விட்டு அரைத்து நகத்தைச் சுற்றி தினமும் தடவி வந்தால் நகச்சொத்தை மாறும். நகசுத்தி வராமல் தடுக்கும், புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. வேப்பிலையும் மஞ்சள்துண்டையும் சேர்த்து அரைத்துப் பூசி வந்தாலும் நகச்சுத்து குணமாகும்.

நகங்களை பராமரிப்பது

நக‌‌ச்சொ‌த்தைக்கு வெந்நீரில் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நகங்களை நன்றாகக் கழுவ வேண்டும்.

தினமும் இளஞ்சூடான நீரில் எலுமிச்சை பிழிந்து 10 நிமிடம் கை விரல்களை வைத்திருக்கவும். இதனுடன் துளசி, புதினா சேர்ப்பது நல்ல புத்துணர்ச்சி கொடுக்கும்.

செக்கு நல்லஎண்ணெய் கொண்டு அழுத்தம் (மசாஜ்) கொடுப்பது.

நார் சத்துள்ள குறுந் தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது.

முருங்கக்கீரை, பப்பாளி, மாம்பழம், பேரிச்சம்பழம் போன்ற உணவு வகைகள் நகத்தை பாதுகாக்க உதவும்.

மன அழுத்தம், கவலை இல்லாது இருப்பது மிக முக்கியம். யோகா, தியானம், சிரிப்புப் பயிற்சி செய்வது நல்லது.

சுத்தமான மண் பானைத் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமான உடல் மற்றும் நக வளர்ச்சிக்கு வழிவகுக்கும். உடல் ஆரோக்கியத்தின் வெளிப்பாடே நகங்கள்.

இரசாயன சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். இயற்கை மூலிகை பொடிகளை பயன்படுத்தலாம். நகப்பூச்சை தவிர்த்து மருதாணி பயன்படுத்தவும். கை விரல் நகப்பூச்சின் இரசாயனம் உணவோடு வயிற்றில் சேர்ந்து பல உபாதைகளை ஏற்படுத்தும்.

நல்ல முடி வளர்ச்சிக்கு விரல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இரு கைகளிலும் உள்ள நான்கு விரல்களின் (கட்டை விரலைத்தவிர) ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வலக்கையின் நான்கு விரல்களும் இடக்கையின் நான்கு விரல்களுடன் நன்கு உராயுமாறு விரல்களை அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். விரல்களின் பின் பக்க நுனிகள் அதாவது நகங்கள் இருக்கும் பகுதி தலைமுடியின் வேர்ப்பகுதியில் இணைகிறது. அதனால் இவ்வாறு நகங்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது தலைமுடியின் வேர்ப்பகுதி தூண்டி விடப்படுகிறது. இதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. மேலும் முடி வளரவும் இம்முறையில் அதிகம் வாய்ப்பு இருக்கிறது.

விரலுக்கு மகுடமான நகங்களை, வீண் என்று நினைக்காமல் கவனித்துப் பராமரிப்பது உடல் நலத்துக்கு நல்லது.

கைவிரலில் மந்திரம்

நகப்படுகையை தூண்டி விடுவது முடி வளர மட்டும் அல்ல‌. இதனால் உடலில் புத்துணர்ச்சி ஏற்ப்படும், உடலில் ஏற்படும் உடல் வலிகள் சரியாகும், பிராண சக்தி கூடும், மனம் அமைதியாகும். அதுமட்டும் அன்றி உடலில் உள்ள கழிவுகளை எளிதாகவும், விரைவாகவும் வெளியேற்றும். மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். நகப்படுகையை மெதுவாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் தலைவலி, தூக்கமின்மை குணமாகும். நல்ல அமைதியான மனநிலையைப் பெற முடியும்.

வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத நகங்களை, நகமும் சதையும் என்றாற்போல அக்கறையுடன் பேணிப்பாதுகாத்து நல‌மாக வாழ்வோம்.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org