தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்கு உணவு இல்லாத போது


வரகு தேங்காய் வடை

தேவையான பொருட்கள்
  • வரகரிசி - 250 கிராம்
  • தேங்காய் - 1
  • செக்கு கடலை எண்ணெய்
  • சோளம் மாவு - 50 கிராம்
  • மிளகாய் வற்றல் - 6
  • பெருங்காயம்
  • கருவேப்பிலை, கொத்தமல்லி
செய்முறை

வரகரிசியை ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். துருவிய தேங்காயுடன் பெருங்காயம், உப்பு, மிளகாய் மற்றும் வரகரிசியை கெட்டியாக அரைக்கவும். அதனுடன் சோள மாவு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து வைக்கவும். மாவில் தண்ணீர் கூடிவிட்டால் சிறிது சோள மாவு சேர்த்துக் கொள்ளலாம். இதனை சிறிது சிறிது வடைகளாக தட்டி எண்ணையில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும். இதற்கு வெங்காயச் சட்னி, புதினா சட்னி பொருத்தமாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்ண‌ ஏற்ற மாலை சிறுதானியப் பலகாரம்.

ஆசிரியர் குறிப்பு

உழவன் விடுதலைக்கு மானாவாரிப் பயிர்களின் சந்தை வளர்ச்சி மிக முக்கியம். எனவேதான், சிறு தானியங்களுக்கு சந்தை உருவாக்கவும், பெருக்கவும் வேண்டிச் சிறு தானியத்தில் பல்வகைப் பண்டங்களின் செய்முறைகளை தாளாண்மை வெளியிடுகிறது. பொரித்த உணவுகள் பொதுவாக உடல்நலத்திற்கு உகந்தவை அல்ல. நல்வாழ்விற்குப் பல்சுவையும் தேவை என்ற சிந்தனையுடன் இப்ப‌ண்டம் செய்முறையை வெளியிடுகின்றோம். பெரியவர்கள் சற்று மிதமாக உண்ணவும்!

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org