தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வாசகர் குரல்


தாளாண்மை மலர்கிறது. ஆனிமாதம் இதழ்பெற்றேன். தலையங்கம் சிறப்பாக இருந்தது. உழவர்களைத் தேடி . . . புதிய முயற்சி, நல்ல முயற்சி. கவிதை சுடுகிறது - சுய நலத்தை! மாடல்ல மற்றையவை பற்றி மாறுபட்ட கருத்து உள்ளது. தமிழகத்தின் உழவர்களுக்கு உழவு மாடு மிக முக்கியம். அதை பெறுதற்குத்தான் பசுமாடுகள்; பால் கறப்பதை தமிழர்கள், உழவர்கள் விரும்புவதில்லை. மேலும் மாடுகள் வீட்டில் கட்டி வைத்திருப்பதில்லை. மேய்ச்சல் முறையில் வளர்த்தார்கள். மருத்துவ மனைக்கு மாடுகள் சென்றதில்லை. மந்தையாக மேயும்போது மாடு சினை பிடிக்கும். ஊர்க் காளைமாடு சந்தையில் இருக்கும். தீவன செலவு பராமரிப்பு செலவு இல்லை. எனவே கால்நடை வளர்ப்பு எளிதாக இருந்தது. உழவுத் தேவைக்கு காளை மாடுகள் வளர்ப்பைத் தாளாண்மை ஊக்கப் படுத்த வேண்டும் மானாவரி விவசாயிகள் உழவு மாடுகள் இல்லாமல் வேதனைப்படுகிறார்கள். எனவே மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பை உழவர் நலனுடன் இணைக்க வேண்டும். அது ஒன்றே வெற்றி பெறும். சிறந்த‌ உழவர்களைப் பேட்டி எடுத்து தாளாண்மை வெளியிட வேண்டும்.

ஆவணி தாளாண்மை மலர்கிறது சிறப்பாக இருந்தது. தலைவாயில் தலைவர்களுக்கு செல்ல வேண்டுமே! அதுதான் கவலை. பசுமை வெங்கடாசலம் சிறப்பாக இருக்கிறது. பில்மொலிசன் புத்தகம் சுருக்கமாக தமிழில் வரவேண்டும். நோக்கியா குறித்து பொருளியல் கட்டுரை தொழில் வளர்ச்சியின் மாய தோற்றத்தை வெளிபடுத்தும் கட்டுரை. குமரப்பாவின் செல்வம் குறித்த பார்வை மிக சிறப்பாக இருந்தது. செல்வம் குறித்த பார்வையில் நாம் மாற்றத்தை எப்படி பார்க்க வேண்டும் என குமரப்பாவின் குரல் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது. அந்த மாமேதையை சமூகம் மதிக்கிறதா? என வேதனை எழுகிறது. தாளாண்மை மூலம் சிறந்த கருத்துக்களை வெளியிடும் உங்கள் பணியை மதிக்கிறோம். பல மனிதர்களை மாற்றுவதை விடப் பல உயிரினங்களைப் பாதுகாக்கவும், பல கேடுகளுக்கு முடிவுரையாகவும் கட்டுரை பலம் பெறும் என்ற வகையில் தாளாண்மை புதுப் பொலிவுடன் மலர வாழ்த்துகிறேன்.

- ப.தி.ராசேந்திரன், கலசபாக்கம்

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org