தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் -சகி


அரசக் காகம் (King Crow) என்று ஆங்கிலத்தில் இதனை அழைப்பர். ஏனெனில் இவை எதற்கும் அஞ்சா. காக்கை, கருடன், பாம்பு போன்றவை கூட்டின் அருகில் வந்தால் துணிவுடன் அவற்றைக் கொத்திக் காயம் செய்யும் வீரம் படைத்தவை. வசந்த காலத்தில், இக் கரிக்குருவி கூடு கட்ட எந்த மரத்தைத் தேர்ந்து எடுக்கிறதோ, அதில் மற்ற பறவைகள் வேகமாக வந்து கூடு கட்டும் ; இதன் போர்க்குணம் மற்ற பறவைகளுக்கு ஒரு பாதுகாப்பு! ஒரு இலையை வானத்தில் தூக்கிப் போட்டுப் பிடித்து தன் குஞ்சுகளுக்கு விளையாட்டுக் காண்பித்து வேட்டையாடக் கற்றுக் கொடுக்கும். மாடுகளின் உயிர்த் தோழன். மேயும், அசை போடும் மாடுகளின் மேலுள்ளா ஒட்டுண்ணிகளையும், ஈ, கொசுக்களையும் பிடித்துத் தின்பதால் இவை அமர்ந்தாலே மாட்டிற்கு மகிழ்ச்சிதான்....

மேலும் படிக்க...»

செவிக்கு உணவு இல்லாத போது

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கேழ்வரகு மாவை இட்டுத் தேவையான உப்பைக் கலந்து வர மாவை நன்றாக உப்படன் கலக்கவும். லேசாகத் தண்ணீர் விட்டு ஒட்டியும், ஒட்டாத‌ பதத்திற்குப் பிசிறவும். பின் புட்டுக் குழாயில் இம்மாவை இட்டு ஆவியில் வேக வைக்கவும் (மாறாக இட்டிலித் தட்டில் பிடித்து வைத்தும் ஆவியில் வேக வைக்கலாம்). வெந்த மாவை ஆற விடவும் ஒரு வாணலியில் எண்ணை விட்டு அடுப்பில் வைத்து சாதாரணமாய் உப்புமாவிற்குச் செய்வ‌துபோல் கடுகு, மிளகு போன்றவற்றை வறுத்துப் பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின் மிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் ஏற்கனவே வேக வைத்த கேழ்வரகு மாவை இட்டு நன்கு இளக்கி 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும். அதன் பின் துருவிய தேங்காய்ப் பூவைத் தூவி சூடாய்ப் பரிமாறவும்.

மேலும் படிக்க...»

 

அடிசில் பார்வை - அனந்து

உழைக்கும் வர்க்கம் சேர்ந்த சிலர் ஒன்று கூடுகின்றனர், அங்கு இங்கு என்று நாள் முழுவதும் அலைந்து கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக சேர்த்து தாங்களும் தங்கள் குடும்பம் கூட்டமும் சாப்பிட இரை சேர்த்து வைக்கின்றனர். அயராத உழைப்பிற்கு இவர்களை எடுத்துக்காட்டாய் கூறுமளவிற்கு இவர்களது உழைப்பு பெரிதும் பேசப்படுகிறது. அந்த உழைப்பின் பயனாய் சிறப்பான உணவு சேமிக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து ஒன்றாக வாழ கூட்டாக ஒரு குடியிருப்பையும் அமைக்கிறார்கள். அப்பொழுது யாரோ அந்த குடியிருப்பை தீயிட்டு, இவர்கள் சேர்த்து வைத்த மொத்த உணவையும் கொள்ளை அடித்து சந்தோஷமாக உண்ணுகின்றனர். விற்று லாபமும் சம்பாதித்து அனுபவிக்கின்றனர்..

மேலும் படிக்க... »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org