தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்

அண்மையில் சில முக்கியமான நிகழ்வுகள் நடந்தன. அவை மிகுந்த நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளன.

நிகழ்வு 1: எடுவார்டோ வெர்டூகோ என்னும் மெக்சிகோ நாட்டின் மத்திய நீதிபதி, மரபீனி மாற்றப்பட்ட மக்காச்சோளத்தின் திறந்த வெளிப் பரிசோதனைகளுக்கும், அவற்றின் விற்பனைக்கும் தடை விதித்துள்ளார். அந்நாட்டின் சூழல் பாதுகாப்பு அமைப்பான SEMARNAT ற்கு உடனடியாக மரபீனிச் சோளத்தைத் தடை செய்யுமாறு ஆணையிட்டுள்ளார். வளர்ந்த நாடுகளிலும், நம் போன்ற வளருகிறேன் என்று அழியும் நாடுகளிலும், நீதிபதிகள் பல அரசியல் மற்றும் அதிகார நெருக்கடிகளுக்கு உட்படுத்தப்பட்டுத் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டி மரபீனி மாற்று விதைக் கும்பணிகளுக்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கவே தயங்குகிறார்கள்...

மேலும் படிக்க...

வாசகர் குரல்

தாளாண்மை தவறாமல் படித்து வருகிறேன். சென்ற இதழில் வந்த காரபுட்டு செய்து ருசித்தோம். ஜெய்சங்கரின் மாடல்ல மற்றையவை மிகப் பயனுள்ள பல தகவல்களைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் எங்கள் மாட்டுக் கொட்டகை வடிவமைத்துள்ளோம். ஒவ்வொரு இதழிலும் மாடல்ல மற்றையவை நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு தொடர்....

மஞ்சள் பற்றியும், பாரம்பரிய உணவு பற்றியும் வந்துள்ள அடிசில் பார்வை கட்டுரை மிக மிக அருமை. மிகவும் ரசித்தேன். அக்கட்டுரையை எங்கள் கல்லூரி மாணவர்களுக்கும், எங்கள் ஊர் விவசாயிகளுக்கும் கொடுத்து வ‌ருகிறேன்!

மேலும் படிக்க...»

 

உணவும் உரிமையும் - சரா

“நீ அழிந்தாலும், என் லாபம் அழியக் கூடாது!” - மனிதகுலத்திற்கு விடப்படும் சவால்.

தற்போது பேயர் மற்றும் சின்ஜெண்டா கும்பணிகள் ஐரோப்ப நாடுகளின் கூட்டுறவை, சர்வ தேச வழக்காடு மன்றத்தில் இழுத்து வழக்காடுகின்றன. எதற்கு - அவரவர் நாட்டின் தேனீக்களைப் பாதுகாப்பதற்கு!

ஆம், நியோனிகொடினோய்டு (neo nicotinoid) என்னும் கொடிய‌ பூச்சிகொல்லி காரணமாக, ஐரோப்பாவில் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. ஐரோப்பிய‌ நாடுகளின் கூட்டரசாகத் திகழும் ஐரோப்பிய‌ யூனியன், சமீபத்தில் இந்தப் பூச்சி கொல்லியை இரண்டு வருடங்களுக்குத் தடை செய்ய முடிவெடுத்தது. இந்த முடிவை எதிர்த்து பேயர் மற்றும் சின்ஜென்டா கும்பணிகள் இப்போது வழக்காடி இருக்கின்றன...

மேலும் படிக்க... »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org