தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதிய புலவர்கள் - பாபுஜி

இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட பூட்ஸ் (Boots) என்கிற மருந்து நிறுவனம் (இப்பொழுது BASF என்கிற ஜெர்மானிய நிறுவனத்தின் அங்கமாகிவிட்டது) சிந்திராய்டு (Synthroid) என்கிற மருந்தை 1980களின் முடிவில் சந்தைக்கு கொண்டு வந்தது. இந்த மருந்து தைராய்ட் சுரப்பி ஒழுங்காக வேலை செய்யாததால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு வரமாகவே கருதப்பட்டது; (தைராய்ட் சுரப்பி உடலின் திசுக்களில் நடக்கும் வேதி வினைக்கு தேவையான வினையூக்கிகளையும், உடலின் சுண்ணாம்பு விகிதம் சரியாக இருக்க தேவையான ஊக்கிகளையும் உற்பத்தி செய்கிறது). சிந்திராய்டு மருந்து இந்த ஊக்கிகளை செயற்கையாக உடலில் உண்டாக்குகிறது. 80 லட்சத்துக்கு அதிகமான அமெரிக்கர்கள் தினமும் பயன்படுத்தும் ஒரு இன்றியமையாத மருந்தாக சிந்திராய்டு குறுகிய காலத்திலேயே பெயர் வாங்கி விட்டது (அதாவது 60 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள தைராய்ட் மருந்து சந்தையில் பெரும் பங்கு!).

மேலும் படிக்க... »

மரபீனிப் பொய்கள் - வந்தனா சிவா

<

மரபீனி மாற்றப்பெற்ற உயிரிகள் தொடர்பான பிதற்றல்கள் முனைவர் வந்தனா சிவா, மேலாண் இயக்குநர், 'நவதான்யா' மரபீனி மாற்றப்பெற்ற உயிரிகள் (மமாஉ) குறித்த சொற்போர் கடந்த சில மாதங்களில் சூடுபிடித்துள்ளது. மமாஉயிரிகளின் பலன்கள் விதந்தோப்பட்ட அளவுக்கு இல்லை என்பதற்கான அறிவியல் அறிகுறிகள் இந்தச் சொற்போரின் ஒரு புறம் உள்ளன. அந்தத் தொழில்துறையில் உள்ள நிறுவனங்களும் அவ்வுயிரிகள் குறித்த ஆய்வுகளையே தம் அறிவியல் வாழ்வாதாரமாகக் கொண்ட அறிவியலாளர்களும் மற்றொரு பக்கத்தில் உள்ளனர். இது குறித்து ஆய்வதற்கு இந்தியாவின் தலைசிறந்த மற்றும் தளைகளற்ற அறிவியலாளர்களை உறுப்பினராகக் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர் ஆணையம் ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

மேலும் படிக்க... »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org