தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

இயற்கை வழி நெல் சாகுபடி


இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி செயற்கை வேதி உரங்கள் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் நஞ்சில்லாத நெல் சாகுபடி முறை இப்போது பரவலாகி வருகிறது. தமிழக உழவர் தொழில்நுட்பக் கழகத்தில் இணைந்துள்ள பல்வேறு பண்ணையாளர்கள் இயற்கைவழி வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர். அம்முறைகளை இப்போது பார்ப்போம்.

மேலும் படிக்க...»

இயற்கை வழி உழவில்லா வேளாண்மை - காண்பீர்!

ஒருவர்க்கு நிலம் எத்தனை ஏக்கர் இருப்பினும் சுற்றிலும் அதற்கு வரப்பிட்டு வரப்பிலிருந்து 4 அடி உள் பக்கம் தள்ளி பனங்கொட்டையை வேலி போல் 4 அடிக்கு ஒன்று வீதம் நட வேண்டும். இது காலத்தின் கட்டாயம் நிலத்தின் உள்ளே நீர் சேமிப்பின் ஊற்றுக் கண். பனை மர வட்ட வரிசையை அடுத்து மேலும் உட்புறமாக அதேவட்ட வரிசையில் 6 அடி தள்ளி ரோஸ்வும் மரக்கன்றுகள் அல்லது உழவன் விரும்பும் காட்டு ரக மரங்கள் எதையேனும் ஒன்றினை 15 அடிக்கு ஒன்று என நடவேண்டும். இஃது நீண்ட நாள் சுமார் 25 ஆண்டுகளில் வருவாய் தரும். அடுத்து மேலும் உட்புற வட்ட வரிசையில் 15 அடி தள்ளி 15 அடிக்கு ஒன்று வீதம் வடுமாங்காய் (உயர்தர ஊறுகாய்க்கு மட்டும்) கன்றுகள் நடலாம். இவை 7 முதல் 10 ஆண்டுகளில் நல்ல வருவாய் தரும். நான்காவது உட்புற வட்டவரிசையில் 15 அடி தள்ளி இடைவெளி 10 அடி வீதம் அகர்வும் எனும் (ஊறுவத்தி தயாரிப்புக்குரிய மூல பொருள்) மரக்கன்றுகள் நடலாம்.

மேலும் படிக்க...»

 

மாடல்ல மற்றையவை - ஜெய்சங்கர்

சென்ற இதழில் மாடுகளுக்கு என்ன தீவனம் அளிக்க வேண்டும், எவ்வளவு அளிக்க வேண்டும் என்று பார்த்தோம், தீவனம் எப்போது அளிக்க வேண்டும்? தீவனத்தை பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் அடர் கலப்பு தீவனம் என்று பிரித்தோம் அல்லவா? இதில் அடர் தீவனம் அளிப்பதாக இருந்தால் இரண்டு வேளையாக பிரித்து அளிக்கலாம். பொதுவாக இரண்டு வேளை பால் கறக்கிறோம். (நான் இப்போது வசிக்கும் பண்ணைக்கு அருகில் உள்ளவர்களில் பெரும்பாலோர் ஒரு வேளையே கறக்கின்றனர். மாலையில் கறப்பதில்லை! கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை சாதியினர் பால் கறப்பதே பாவம் என்று நம்புகின்றனர். மாடுகளை வளர்க்கின்றனர். ஆனால், பால் கறப்பதில்லை!!) காலையில் ஐந்து முதல் ஏழு மணிக்குள் கறப்பதும் மாலையில் மூன்றிலிருந்து ஐந்து மணிக்குள் கறப்பதும் பொதுவான பழக்கம். கட்டுத்தறியிலேயே உள்ள மாடுகளுக்கு இரண்டு வேளை அடர் தீவனம் அளிப்பது சிறந்தது.

மேலும் படிக்க... »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org