தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்கு உணவு இல்லாத போது

பிரண்டை வரகு தோசை - நாச்சாள்

தேவையான பொருட்கள்

 • வரகு அரிசி - 2 கோப்பை
 • உளுந்து - 1/4 கோப்பை
 • வெந்தயம் - சிறிது
 • நுனிக்கொழுந்து பிரண்டை துண்டுகள் - 10
 • உப்பு தேவையான அளவு
 • செக்கு நல்ல எண்ணெய் / நெய்

  செய்முறை

  வரகு அரிசியையும், வெந்தயம், உளுந்தையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்து ஆட்டி, உப்பு சேர்த்து கலக்கவும்.

  கணு நீக்கி தோல் சீவி பிரண்டையை பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். ஆறியவுடன் நன்றாக அரைத்து வரகு அரிசி மாவுடன் கலக்கவும். மாவு 8 மணி நேரமாவது புளிக்க வேண்டும். தோசைக்கல்லை காயவைத்து அதில் மாவை தோசையாக ஊற்றி மூடி, இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.

  பிரண்டை பசி உணர்வை தூண்டும், வரகு அரிசி மாதவிடாய் பிரச்னை உடைய பெண்களுக்கு ஏற்ற நல் உணவு. வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும்.

  பிரண்டை வரகு தோசை, சத்தான மருத்துவ குணம் நிரந்த காலை உணவு.

   
 •  
  தற்சார்பு இயக்கம்

  நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

  மேலே அறிய‌ »
  நிதி மிகுந்தவர்...

  பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

  மேலே அறிய‌ »
  தொடர்பிற்கு...

  எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

  Phone: +91 4364 271190
  Email: info@kaani.org