தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பறவைகள் -சகி


இந்த மாதம் நாம் தெரிந்து கொள்ளும் பறவை கரிக்குருவி

கரிக்குருவி, இரட்டை வாலன், Drongo, King Crow, Dicrurus macrocercus என்றெல்லாம் பெயர் உடைய இப்பறவை தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் இருக்கும். வயல்களில், மாடு மேயும் இடங்களில் இவற்றை அதிகம் காணலாம்.

தோற்றம்:

பார்ப்பதற்குச் சின்ன காக்கையைப் போல் (28 செ.மீ) இருக்கும். பளபளவென்ற கருப்பு நிறத்துடன், கூர்மையான மூக்குடன் , அலகு நுனியில் ஒரு வெள்ளைப் புள்ளியுடன் இருக்கும். வால் நீண்டு V வடிவத்தில் இருக்கும்.

உணவு

பூச்சிகள்தான் இதன் உணவு. தாவரங்களைச் சேதப்படுத்தும் பூச்சிகளையும், புழுக்களையும் உண்பதால் உழவனின் உற்ற தோழன் இந்தக் கரிக்குருவி.

இனப்பெருக்கம்

தை மாதம் முதல் ஆடி மாதம் வரை இனப் பெருக்கத்தில் ஈடுபடும். இக்காலத்தில் ஆண், பெண் இரண்டும் பாடி ஆடி மகிழும். மூன்று முதல் நான்கு முட்டைகள் இடும். உயரமான, பெரிய இலைகள் கொண்ட மரங்களில்தான் இவை கூடு கட்டும். 14 முதன் 15 நாள்களில் குஞ்சு பொரிக்கும்.

சுவையான செய்திகள்

அரசக் காகம் (King Crow) என்று ஆங்கிலத்தில் இதனை அழைப்பர். ஏனெனில் இவை எதற்கும் அஞ்சா. காக்கை, கருடன், பாம்பு போன்றவை கூட்டின் அருகில் வந்தால் துணிவுடன் அவற்றைக் கொத்திக் காயம் செய்யும் வீரம் படைத்தவை. வசந்த காலத்தில், இக் கரிக்குருவி கூடு கட்ட எந்த மரத்தைத் தேர்ந்து எடுக்கிறதோ, அதில் மற்ற பறவைகள் வேகமாக வந்து கூடு கட்டும் ; இதன் போர்க்குணம் மற்ற பறவைகளுக்கு ஒரு பாதுகாப்பு!

ஒரு இலையை வானத்தில் தூக்கிப் போட்டுப் பிடித்து தன் குஞ்சுகளுக்கு விளையாட்டுக் காண்பித்து வேட்டையாடக் கற்றுக் கொடுக்கும்.

மாடுகளின் உயிர்த் தோழன். மேயும், அசை போடும் மாடுகளின் மேலுள்ளா ஒட்டுண்ணிகளையும், ஈ, கொசுக்களையும் பிடித்துத் தின்பதால் இவை அமர்ந்தாலே மாட்டிற்கு மகிழ்ச்சிதான்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org