வரகு பருப்பு சாதம் - சூர்யா
வரகு பருப்பு சாதம்
வரகும் பருப்பும் இணைந்த உணவு
மிகுந்த புரதச் சத்தையும்,
நோய்
எதிர்ப்பாற்றலையும் கொண்டது.
நீரிழிவு (சர்க்கரை) நோயாளிகளுக்கு
மிகவும் உகந்தது.
தேவையான பொருட்கள்
வரகு - 1 கோப்பை
துவரம் பருப்பு - அரை கோப்பை
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
மிளகாய் வற்றல் - 4
சீரகம் - கால் தேக்கரண்டி
பட்டை - சிறியது
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
கொத்துமல்லி - சிறிதளவு
நெய் மற்றும் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
முதலில் பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் ஏற்றி, எண்ணெய் விட்டு மிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். சீரகம், பட்டையை சற்றே பொடித்து வைக்கவும். வரகு மற்றும் துவரம் பருப்பை நன்கு களைந்து கொண்டு வதக்கி வைத்த பொருட்கள், சீரகம், பட்டை, மஞ்சள் மற்றும் கொத்துமல்லி சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும். வெந்தபின் நெய் சேர்த்து ஊறுகாய், மோர் மிளகாயுடன் பரிமாறலாம்.