தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு

தலையங்கம் - ஆசிரியர்

தற்போது உழவர் சமூகத்தின் மீது ஈவு இரக்கமற்ற கொடுமையான போர் தொடுக்கப்பட்டுள்ளது. உழவர்களின் மீது சுமைகளை ஏற்றிக் கொண்டே செல்கின்றனர். விளைவாக வேளாண்மையை விட்டு வெளி யேறும் உழவர்கள் ஏராளம். நீர் ஆதாரங்களைக் கெடுத்து தொழிற்சாலைகளுக்கு என்றனர். அந்தத் தொழிற்சாலைப் பொருள்களோ உள்ளூர் மக்களுக்கல்ல வெளிநாட்டு ஏற்றுமதிக்கு என்றனர். காவிரி முல்லைப் பெரியாறு போன்ற ஆறுகளில் இருந்து கிடைத்து வந்த தண்ணீ ருக்கும் உலை வைத்தாயிற்று. கண்மாய்களும் ஏரிகளும் கழிவு சாய்க்கடை குட்டைகளாகவும், கட்டுமான மனைகளாகவும் மாறிவிட்டன. உள்கட்டமைப்பு மேம்பாடு என்ற பெயரில் நான்கு வழிச் சாலைகளும் தங்க நாற்கரச் சாலைகளும் போடப்படுகின்றன. கேட்டால் உழவர்களின் விளைபொருள்களை கொண்டு சேர்க்கப் போகிறோம் என்கின்றனர்... . முழுக் கட்டுரை »

தோரோ என்னும் துறவி

தற்சார்பு வாழ்வியல் - 02 - சாட்சி


1817ல் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் பிறந்த தோரோ (Henri David Thoreau - 1817-1862), தற்சார்பு வாழ்வியலைத் தேடித் தன் 28ஆம் வயதில் (1845) வால்டன் என்னும் குளக்கரையில் தானே தன் கையால் கட்டிய ஒரு குடிசை வீட்டில் இரண்டு வருடம் இரண்டு மாதம் தங்கி, எந்தக் கொள்முதலோ, பண்டமாற்றோ இன்றித் தன் உழைப்பால் மட்டுமே தன் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள இயலுமா என்று ஆராய்ந்தார். இவ்வனுபவங் களைத் தொகுத்து வால்டன் (Walden or Life in the Woods) என்னும் புத்தகமாக வெளியிட்டார். இன்றளவும் தற்சார்பு வாழ்வியலைப் பற்றிய அடிப்படை நூலாக அது கருதப்படுகிறது. ...

மேலும் படிக்க...»
 

குமரப்பாவிடம் கேட்போம்

ரசாயன உரங்கள் - தமிழில்: அமரந்தா


மண்ணின் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, ரசாயன உரங்கள் மண்ணின் நச்சுத் தன்மையை அதி கரிக்கிறது. வங்கமும் பீகாரும் ஏற்கெனவே இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன. உரங்களால் பயன் கிட்ட வேண்டுமானால் மண்ணின் மேல் இடாமல் அதனை குறிப்பிட்ட ஆழத்தில் இடவேண்டும். ஆழமாக உழுது அதிகமாக நீர் பாய்ச்சினால் மட்டுமே உரத்தைப் பயன்படுத்த முடியும். பருவ மழையின் அளவு, பெரும் பகுதி நிலத்தின் வளம் மாறுபடும் நம் நாட்டில், ஆழமாக உழுது விலை உயர்ந்த உரங்களை இட்டாலும் மழை பொய்த்து விட்டால் சூதாட்டம் போல ஆண்டு முடிவில் ஒன்றுமில்லாமல் போகக்கூடும்...

மேலும் படிக்க...»
 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org