தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குமரப்பாவிடம் கேட்போம்

ரசாயன உரங்கள் -தமிழில்: அமரந்தா

ஜே,சி,குமரப்பா தற்சார்புப் பொருளியலின் தந்தை, காந்தியச் சிந்தனையாளர் தமிழகம் தந்த நல் முத்து, இவர் நம்நாட்டின் தற்சார், அமெரிக்க-ஐரோப்பிய அடிமையாக்க எதிர்ப்பு பற்றி எழுதியும் ஆராயந்தும் தந்தவை ஏராளம்...

மண்ணின் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, ரசாயன உரங்கள் மண்ணின் நச்சுத் தன்மையை அதி கரிக்கிறது. வங்கமும் பீகாரும் ஏற்கெனவே இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன. உரங்களால் பயன் கிட்ட வேண்டுமானால் மண்ணின் மேல் இடாமல் அதனை குறிப்பிட்ட ஆழத்தில் இடவேண்டும். ஆழமாக உழுது அதிகமாக நீர் பாய்ச்சினால் மட்டுமே உரத்தைப் பயன்படுத்த முடியும். பருவ மழையின் அளவு, பெரும் பகுதி நிலத்தின் வளம் மாறுபடும் நம் நாட்டில், ஆழமாக உழுது விலை உயர்ந்த உரங்களை இட்டாலும் மழை பொய்த்து விட்டால் சூதாட்டம் போல ஆண்டு முடிவில் ஒன்றுமில்லாமல் போகக்கூடும். நிலத்தை இவ்வாறு பயன்படுத்தி நட்டமடைய நம் விவசாயிகள் பணவசதி படைத்தவர்கள் அல்ல. முன்பே குறிப்பிட்டது போல எந்த நிலமானாலும் செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு மண் பரிசோதனை செய்து அதன் தேவைகளைக் கண்டறிய வேண்டும். பரந்துபட்ட, முறையான பயிற்சி பெற்ற மண் மருத்துவர்களாக செயல்படக் கூடிய விவசாய வேதியலறிஞர்கள் தேவை. விவசாய நிலம் ஒவ்வொன்றிலும் ஒரு மண் பரிசோதனை நிபுணர் இல்லாதவரை விவசாயிகளிடம் செயற்கை உரங்களைத் தருவதென்பது முட்டாள்தனமே. இச்செயல் ஓப்பியம், மார்ஃபியா போன்ற நச்சு ஊக்கிகளை விவரமறியாத நோயாளிகள் வசம் ஒப்புவிப்பதற்குச் சமமாகும். எனவே மருந்தாக உரங்களைப் பயன்படுத்த விரும்புவோர், அதற்கு முன் பெரிய எண்ணிக்கையில் விவசாய வேதியல் நிபுணர்களை பணியில் அமர்த்த வேண்டும். நம் நாட்டில் மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கவே போதிய மருத்துவர்கள் இல்லை. அவ்வாறிருக்க பெரும் எண்ணிக்கையில் மண் வைத்தியர்களுக்கு எங்கே போவது?

உண்மைகள் கண்முன் இருக்க தவறான அறிவுரைகளை ஏற்று மத்திய அரசு செயற்கை உரத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி விரிவுபடுத்துகிறது என்று அறிந்து வருத்தப் படுகிறோம். பீகாரிலுள்ள சிந்திரி என்னு மிடத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பில் அந்நிய நாட்டு இயந்திரங்களின் உதவியோடு பத்து கோடி ரூபாய் மதிப்பில் கட்டங்களிலும் பிற உபகரணங்களிலும் முதலீடு செய்து இந்திய அரசு உரத் தொழிற்சாலை தொடங்கும் திட்டத்தை செயற்படுத்தி வருகிறது.

தற்கொலைக்கு ஒப்பான இத்தகைய திட்டங்களைக் கைவிட்டு ஆரோக்கியமான வேறு ஆராய்ச்சிகளைச் செய்யச் சொல்லும் சரியான அறிவுரைகள் வெற்றிபெறும் என்றும் அதனால் இந்த உரங்களால் வீணாகிப் போகும் உயிர்மப் பொருட்கள் அவ்வாறு வீணாகப் போகாமல் நமது விளைநிலங்களுக்குப் பொருத்தமான உரமாகத் தங்கியிருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். மக்களுக்கு ஊறுவிளைவிப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் பணம் குவிப்பதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட இரக்கமற்ற சுரண்டல்வாதிகளிடமிருந்து காப்பாற்றி நமக்கு ஆரோக்கிய உணவையும் தரக்கூடியது இந்தத் திட்டம் ஒன்று தான்.

செப்டம்பர் & அக்டோபர் 1947 (கிராம் உத்யோக் பத்ரிகா)

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org