தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

டிம்பக்டூ - கற்பனை உலகு

அக்கரை பார்வை - 12 - அனந்து

டிம்பக்டு என்பது நிஜத்தில் வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு ஊர் ஆகும். ஆனால் ஆங்கிலத்தில் இதனை போக்கிடம் இல்லாத பொழுதோ அல்லது எங்கு சென்றார் என்பது தெரியாத பொழுதோ, விளையாட்டாக உபயோகிக்கப்படும் ஒரு சொல்லாகி உள்ளது. இப்படித்தான் பல ஆண்டுகளுக்கு முன் நம் கதையின் நாயகர்கள் பப்லு மற்றும் மேரி, அனந்தபூர் மாவட்டத்தில் சென்னகொத்தபள்ளி என்னும் கிராமத்திற்கு அருகிலுள்ள மலையில், மரங்கள் நட செல்லும் பொழுது அவர்களது குழந்தை எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு “டிம்பக்டு” என்று விளையாட்டாக கூறி, இன்று அது ஒரு பெரும் இயக்கமாக உருவெடுத் துள்ளது. நான் அங்கு கடந்த மாதம் சென்ற பொழுது, பல ஆண்டுகளுக்கு முன் பப்லுவை எங்கு செல்கிறீர்கள் என்று கேட்ட அந்த குழந்தை தான் அங்கு எனக்கு அந்த முழு இடத்தையும் சுற்றி காட்டிய பெண்மணி! ... முழுக் கட்டுரை »

புவி வெப்பமடைதலும் வேளாண்மையும் - டாக்டர் ஜீவா

பூமியைச் சுற்றிய வளி மண்டலத்தில் கரிக்காற்று (CO2) மற்றும் மீத்தேன், நைட்ரச ஆக்சைடு போன்ற பசுங்குடில் வாயுக்கள் அதிகம் குவிவதால் உண்டாகும் பூமியின் வெப்பநிலை உயர்கிறது. பசுங்குடில் வாயு குவிதல் (GHG) இதனால் உண்டாகும் பசுங்குடில் விளைவு புவி வெப்பமடைதல் (global warming) பருவநிலை மாற்றம் ஆகிய சங்கிலித் தொடர் தீய விளைவுகளின் தொடக்கப்புள்ளி மனிதனும் மனிதச் செயல்பாடுகளுமே.

பருவநிலை மாற்றம் மனித உயிர்வாழ்வின் முதன்மைத் தேவையான உணவு உற்பத்தியைப் பாதிக்கும். உலகின் விவசாயம் பெரிதும் மழையை நம்பியே உள்ளது. இது இந்தியாவில் 41 விழுக்காடு. பருவநிலை மாற்றத்தால் மழை குறையும். ஏற்கனவே இருக்கும் நீருக்கும் அதிகப் போட்டி உண்டாகும் ...

மேலும் படிக்க...»
 

மரபீனி மாற்றப் பயிர்கள் - ராம்கி

இயற்கையே நமது வாழ்வாதாரம் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இருப்பினும், இயற்கையை நாம் மிக வேகமாக அழித்து வருகிறோம். இதன் விளைவுகள் நம் தொழில், வாழுமிடம், பொருளாதார வசதி, கல்வித் தகுதி, ஜாதி, மதம், மொழி, இனம் ஆகிய அனைத்துக்கும் அப்பாற்பட்டவை. இவ்விளைவு களை நாம் அனைவருமே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்கிறது பழந்தமிழ் இலக்கியம். நம் உணவாகிய நிலத்தையும் நீரையும் தேவையில்லாமல் கெடுத்துவரும் ஒரு செயலைப் பற்றி அறிந்துகொள்ள நீங்கள் ஒரு சில நிமிடங்களை யாவது ஒதுக்குவீர்களென நம்புகிறோம்.

மேலும் படிக்க... »
 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org