
மழையும் மழைக் காலமும் வெப்பமண்டல நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியும்
கும்மாளமும் தருபவை. தமிழர்களின் வாழ்வோடு இணைந்த மழை செழிப்பிற்கு
அடிப்படையாகும். வேளாண்மைக்கு அடிப்படை நீர். ‘நீரின்று அமையாது உலகு’ என்பார்
வள்ளுவர். பண்டைத் தமிழ் மக்கள் நீரின் மீது வைத்திருந்த மதிப்பீடுகளும்
நம்பிக்கைகளும் நமக்கு வியப்புத் தருவன. ஆனால் அந்த மரபில் வந்த இன்றைய மக்கள்
நீரை எவ்வளவு மோசமாகப் பயன்படுத்துகின்றனர் என்பது அதைவிட வியப்புக் கலந்த
வேதனை உண்மையாகும். போற்றுதக்குரியவையாக ஞாயிறு, திங்கள், இவற்றுடன் மாமழை போற்றுதும் மாமழை
போற்றுதும்’ என்கிறார் இளங்கோவடிகள். மழைப் பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளை
பண்டைத் தமிழர் மிக முன்பே அறிந்து கொண்டுள்ளனர்.
முழுக் கட்டுரை »
‘வேண்டுமடி விடுதலை எப்போதும் அம்மா’ என்றான் மகாகவி பாரதி. நாம் தற்சார்பு இயக்கத்தில் முக்கிய கோட்பாடாக முன்னிறுத்துவது தனி மனித விடுதலையும்,
தற்சார்பும்தான். பல தனி மனிதர்கள், குடும்பங்கள் விடுதலை அடைந்து விட்டால்
அது ‘பாலிற் பிரை போல்’ மெதுவாய் வளர்ந்து ஒரு சமூக மாற்றத்தை
உருவாக்கிவிடும். இதை எப்படிச் செயல்படுத்துவது என்று குழப்பமாய் இருக்கும்
பொழுது, நாமே குழம்பாமல், நமக்கு முன்னே இருந்த பல அறிவாளிகளையும்,
ஞானிகளையும் பார்த்து, அவர்கள் எழுத்தைப் படித்துத் தெளிய முயற்சிக்கலாம்.
நம்மைச் சிட்டுக் குருவிகளைப் போல் விட்டு விடுதலை ஆகி நிற்கச் சொன்ன பாரதி,
விடுதலையின் அங்கங்களை விவரிக்கும் பொழுது வீட்டைப் பற்றி “பீடையிலாததோர் கூடு
கட்டிக் கொண்டு” வாழச்சொல்கிறான். சங்க இலக்கியத்தில் அடிப்படைத் தேவைகளாக
உணவு, உடைக்கு அடுத்து இருப்பிடமும், ஒழுகலாறும் (வாழ்முறை/தர்மம்) வரிசைப்
படுத்தப்படுகின்றன...
மேலும் படிக்க... »