தலையங்கம்


மத்திய அரசு இவ்வாண்டிற்கான நிதியறிக்கை அறிவித்து 15 நாட்கள் ஆகி விட்டன. இவ்வறிக்கையில் உழவர்களுக்கு என்ன பலன், துண்டு விழுவது எவ்வளவு என்பதெல்லாம் பொருளற்ற கவலைகள். திருடர்கள் கையில் சாவியைக் கொடுத்து விட்டுக் கருவூலத்தைப் பற்றிக் கவலைப் படுவது நம் மடமையே. யார் நல்ல திருடன் என்பதைப் பற்றித்தான் நாம் சிந்திக்கும் நிலைமை உள்ளது. ஊழல் இல்லாத கட்சியே இல்லை.

பிச்சையெடுத்து உண்டபின் மடம் கட்டத் திட்டமிடும் ஆண்டிகள் போல் ஒவ்வொரு ஆண்டும் இல்லாத நிதியைக் கடன் வாங்கி ஒதுக்கீடு செய்கிறோம். அறிக்கை என்பது வரும் ஆண்டிற்கான திட்டமே - இது வரை அறிவித்த திட்டங்கள் எவ்வளவு தூரம் நடைமுறைக்கு வந்தன, கடந்த ஆண்டுகளில் எவ்வளவு விழுக்காடு இலக்குகள் நிறைவு செய்யப் பட்டன என்பதெல்லாம் யாரும் அறிவிப்பதில்லை. அடுத்த ஆண்டு சீட்டுக் கட்டு விளையாட்டுப் போல் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு அடுத்த ஆட்டம் தொடங்கி விடுகிறோம். 'தேனை எடுத்தவன் புறங்கையை நக்குவான்' என்று பொதுப் பணத்தில் சுரண்டுவதைப் பற்றி சாணக்கியரே அர்த்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறார். எனவே நமக்கு ஊழல் என்பது வரலாற்றுக்கு முற்பட்டது! ஆனால் இப்போது பொதுப் பணத்தில் மிகச் சிறு அளவே மக்களைச் சென்றடைகிறது என்பதும், அவையும் பெரும்பாலும் இலவசங்களுக்குப் போகின்றன என்பதும்தான் மிகக் கசப்பான உண்மை. முழுத்தேனையும் தம்முள் பங்கு போட்டுக் கொண்டு வெறும் புறங்கையை நக்கக் கையேந்தும் நிலையில் நம்மை ஆளும் அரசுகள் வைத்துள்ளன.

முழுக் கட்டுரை »

குமரப்பாவிடம் கேட்போம் -பாபுஜி


நம் நாடு இதுவரையில் சந்தித்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று இப்போது நம் முன் நிற்கிறது. இந்த நிகழ்வின் விளைவு 1943 இல் நடந்த வங்காளப்பஞ்சத்தை விட கொடுமையானதும் மிகப்பரந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றும் கூட என்று நம்மால் இப்போதே கூற இயலும். இந்த நிகழ்வின் ஆபத்தான விளைவுகளை பற்றி அதன் பொறுப்பில் இருப்பவர்களே யோசிக்காதது இந்த ஆபத்தை பேராபத்தாக மாற்றிவிடக்கூடும். அவர்கள் யோசிக்காமளிருந்தால் கூட பரவாயில்லை, தம் கண் முன்னால் காணும் உண்மைகளையும் மக்களின் கருத்துகளையும் வேண்டுமென்றே கண்களை மூடிக்கொண்டு உதாசீனம் செய்வது போல நடந்துகொள்கின்றனர். அவர்கள் எந்த விதமான சார்பற்ற ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்கும் மனநிலையில் இல்லை. நம் நாடே தடுமாறி விழும் அபாயம் நிகழ்ந்தால் கூட அவர்கள் தம்முடைய தனி உலகத்தில், தனி சிந்தனைகளோடு தனித்திருக்கவே விரும்புகின்றனர். தோல்வியிலிருந்து பாடம் கற்பதை விட அவர்களுக்கு தம் தவறுகளை சரியென்று வாதிடுவதே மேலானதாக உள்ளது. இத்தகைய சூழலிலும் நம் நிலைப்பாடு சார்ந்த பரிந்துரைகளை மக்களுக்கு முன்வைப்பதன் மூலம் ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பு உள்ளதால் நாம் அவற்றை முன்வைக்கிறோம்.

உணவு மற்றும் விவசாயம் என்கிற துறை நம் மைய அமைச்சரைவயில் யாருமே விரும்பாத ஒரு மாற்றாந்தாய்க் குழந்தையாகவே பாவிக்கப்படுகிறது. ஒரு புதிய அமைச்சருக்கு அந்தத் துறை சார்ந்த அறிவோ, பணிகளை செயல்படுத்தும் திறனோ இருக்கின்றதா என்ற கேள்விக்கே இடமின்றி, வேறு எந்தத் துறையுமே அவருக்கு ஒதுக்க முடியாதென்றால் மட்டுமே துறைகளிலேயே மிக முக்கியமான இந்த உணவு மற்றும் விவசாயத்துறை அவரிடம் 'தள்ளப்'படுகிறது. நம் நாட்டின் அடிப்படை ஆதாரத்தையே தீர்மானிக்கக்கூடிய இந்தத் துறை நாட்டின் தலைவரின் நேரடி கவனிப்பிலும் கட்டுப்பாட்டிலும் இருக்கவேண்டுமென்றே அண்ணல் காந்தியடிகள் கருதினார்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org