அழிவினிலே தள்ளுவதோ ஆக்கமெனும் பெயரால்? - கவிஞர் சாரல்குளிர்காலம் பூச்சிகளால் குன்றிவிடும் பயிரின்
குறைகளைய இயற்கையீந்த குருவிகளின் கூட்டம்
தளிர்பலவும் உண்பதற்குத் தங்கிவிடும் புழுக்கள்
தமையுண்ணப் பறந்தெங்குந் தாவிநிற்கும் புட்கள்
சளைக்காமல் கானெங்கும் தம்மனம்போல் திரியும்
சன்னமாகக் குரலெழுப்பித் தம்மிருப்பைக் கூறும்
களைப்பின்றிச் சுற்றுதிங்கே கதிர்ச்சிட்டு நாளும்
கண்டதனின் சுறுசுறுப்பால் களித்தேனே நானும்


பறவைகளின் வாழ்வியலைப் படித்தறிந்த முனைவர்
பலநாளாய் எங்களுடன் பழகியநல் இணையர்
அறிந்தநல்ல செய்திகளை ஆவலுடன் விளக்கி
அகமகிழச் செய்திட்ட அன்புநிறை அன்பர்
செறிவான தமிழினிலே சேதிபல சொல்லச்
செய்தளித்த நூலாலே தெரிந்துகொண்டோம் அவரை
நிறைவுற்றோம் புள்பலவும் நேரினிலே கண்டோம்
நெடுநேரம் கிடைக்காமல் நிறைவின்றிப் பிரிந்தோம்


ஐரோப்பா தனிலிருந்து அகண்டவானைக் கடந்தே
அயர்வின்றி வலசைவரும் அழகுப்புள் கண்டோம்
உருகிவிட்டோம் அதனழகில் உடன்மகிழ்ந்தே நின்றார்
ஒருவாய்ப்பும் முதன்முதலாய் உற்றதிங்கே என்றார்
பருவநிலை கண்டிங்கே பறந்துவரும் புட்கள்
பயிர்தாக்கும் பூச்சிகளைப் பாய்ந்துண்ணும் தோழர்
உரமாகச் செழித்திருக்கும் உணவுவலைப் பின்னல்
உடைந்துவிட்டால் பேரழிவால் உருக்குலையும் பயிர்கள்

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org