தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


வால் காக்கை

Indian Treepie ( Dendrocitta Vagabunda)

எளிதில் அடையாளம் கொள்ளும் குரல் உள்ள பறவை. கோகி… கோகி… கோகிலா என்று மிக‌ அழகாக பாடும் பறவை. காக்கை இனத்தை சேர்ந்தது. காலை நேரங்கள் மற்றும் மாலை நேரங்கள் புங்கமரம், மாமரம், முருங்கை போன்ற மரங்களில் தன் ஜோடியை அழகான குரலில் அழைக்கும்.

தோற்றம்

காக்கையை விட உடம்பு கொஞ்சம் சிறியது. வால் நீளமாக இருக்கும். முகம், வால் நுனிகள், சிறகு நுனிகள் கருமை நிற‌த்திலும், உடம்பு பழுப்பு நிற‌த்திலும், வால் சாம்பல் நிற‌த்திலும், சிறகுகள் வெள்ளை மற்றும் சாம்பல் நிற‌த்திலும் இருக்கும். மூக்கும், கால்களும் கருமை நிற‌த்தில் இருக்கும். இதன் வால் 30 செ.மீ வரை இருக்கும். ஆண், பெண் ஒரே நிற‌த்தில் இருக்கும்.

முழுக் கட்டுரை »

உணவு


தேவையான பொருட்கள்
  1. சிறுதானியம் (வரகு, சாமை, தினை, குதிரைவாலி) - 1/2 கோப்பை
  2. உளுந்த மாவு - கால் கோப்பை
  3. மோர் – 2 கப் (கரைப்பதற்கு தேவையான அளவு)
  4. கேரட் - 2 மேசைக்கரண்டி
  5. பீன்ஸ், முட்டைகோஸ் - 2 மேசைக்கரண்டி
  6. குடைமிளகாய் – 2 மேசைக்கரண்டி
  7. தேங்காய்துருவல் - ஒரு மேசைக்கரண்டி
  8. மிளகு - ஒரு தேக்கரண்டி
  9. சீரகம் - ஒரு தேக்கரண்டி
  10. பொடித்த முந்திரி பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
  11. உப்பு - தேவைக்கு
  12. செக்கு நல்லெண்ணெய் - தேவையான அளவு

முழுக் கட்டுரை »

ஊனுடம்பு ஆலயம் - நாச்சாள்

புதுப்புது பெயருடன் புரியாத மொழியில் வகைவகையான சோதனை முறைகளுடன் பல லட்சங்கள் செலவு செய்தும் முடிவாக‌ இதுதான் இந்த நோய்க்கு மூல் காரணம் இதனை இந்த முறையில் சரிசெய்து விடலாம் என்று கூறுவாரை இன்று விரல் விட்டு எண்ணி விடலாம். மருத்துவர்கள், வைத்தியர்கள், ஹீலர்கள், தெரபிஸ்டுகள் என அனைவரும் மருத்துவம் என்ற பெயரில் தங்களுக்குத் தெரிந்த முறைகளில் சிகிச்சை கொடுத்தாலும் உணவே அனைத்திற்கும் தலையாயது. உணவை எவ்வாறு சீராக்குவது என்னும் கலையையும் உணவு குறித்த உடலின் முழு இரகசியத்தையும் சொல்லிகொடுக்க மறுக்கின்றனர்.

வெறும் வெண்பூசணி சாறு, எலுமிச்சை சாறு அருந்துவதும், இரண்டு தேங்காய் துண்டுகள், பழங்களும் அன்றாடம் உண்ணுவதும், துயில் எழுந்ததும்் காலை யோகாசனம் மற்றும் நஞ்சில்லா உணவுமே நீண்டநாள் நோயிலிருந்து் விடுதலை பெற உதவும். ஒரு சின்ன உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அறிவியலால் உருவாக்க இயலாத பொருள் உணவு. உணவுதான் உடல் இயங்க சக்தியைக் கொடுக்கக் கூடியது (ஓய்வு, காற்று, நீர், உடல் இயக்கம், திட ஆகாரம்) என்பதை மறந்து விடக் கூடாது. இவையே உடல் உயிர் வளர மூலப் பொருள் ஆகும். இவற்றுள் ஒன்று அதிகரித்து மற்றொன்று குறைந்தால் விளைவு ஆரோக்கியமின்மை. காலப்போக்கில் உயிர்கொல்லி நோய்.

உடல் ஆரோக்கியமாக இருக்க நம்மை சுற்றி பல நுட்பங்கள், எளிதாக‌ அறிந்து கொள்ள இயலாத நிலையில் இந்த பிரபஞ்சத்தில் உள்ளது. அவற்றில் ஒன்றான கழிவு நீக்கம் , மிக எளிய முறையில் அன்றாடம் அனைவராலும் பின்பற்றக்கூடிய ஒன்றாக என்றும் ஆரோக்கியத்தை காக்கக் கூடியதாக உள்ளது. கழிவு நீக்கம் பல பரிமாணங்களுடன் இருந்தாலும் எளிதாக அன்றாடம் பின்பற்றக்கூடியதை தவறாமல் கடைப்பிடித்தால் சுகமான வாழ்வைப் பெறலாம்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org