தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


சென்ற மாத‌ இறுதியில் மத்திய அரசு நிதியறிக்கை தாக்கல் செய்துள்ளது. நிதிமிகுந்தவர்களால், நிதி மிகுந்தவர்களுக்காக, நிதி மிகுந்தவர்களைக் கொண்டு தாக்கல் செய்ய‌ப்பட்ட அறிக்கை இது என்பது தெளிவாகிறது. மோடியின் “இந்தியாவில் செய்யுங்கள்” என்ற கோஷ‌த்தைத் தழுவி அந்நிய முதலீட்டுக்கும், உற்பத்திக்கும் மிகப் பல சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மேல் சபையில் பேசிய பிரதமர் ” என் அரசு பணக்காரகளுக்கு அல்ல‌, ஏழைகளுக்கே” என்று 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற ரீதியில் ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

அந்நிய முதலீடும், உற்பத்தியும் நம்நாட்டில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி ஏழ்மையைப் போக்கி விடும் என்று காங்கிரஸ் நம்பியது - 2005 முதல் 2010 உள்ளிட்ட ஐந்தாண்டுகளில் 2.77 கோடிக்கும் குறைவான நிகர வேலைகளையே உருவாக்கியது. நிகர வேலை என்பது (புது வேலைகள் - வேலை இழப்போர்). 100 கோடிப் பேருக்கு மேல் கொண்ட நாட்டில் வளர்ச்சியின் உச்சகட்டம் என்ற ஆண்டுகளில், தாராள மயமாக்கலால் இந்தியா ஒளிர்வதாகச் சொல்லப்பட்ட காலத்தில் இது மிகக் குறைவே. இந்த‌ ஐந்தாண்டுகளில் சுய வேலை வாய்ப்பில், சிறு தொழில்களில் இருந்து 2.5 கோடிப்பேர் வேலைகளைத் தேடிப் போய்விட்டனர் என்று தேசிய புள்ளியியல் கணிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது.

வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு அந்நிய முதலீடு தேவை என்றால், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% க்கும் குறைவான பங்கு வகிக்கும் வேளாண்மை எப்படி 61% மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்றது ? 56% பங்கு வகிக்கும் சேவைப் பிரிவோ 26% பேருக்கே வேலை அளிக்கிற‌து. நம் அரசு பெரும் முக்கியத்துவம் அளிக்கும் உற்பத்திப் பிரிவோ, 8.5% பேருக்கே வேலை அளிக்கிறது.

முழுக் கட்டுரை »

புதிய பொருளாதாரக் கொள்கை - உழவன் பாலா


சென்ற மூன்று இதழ்களில் திரு. சூமாக்கர் அவர்களின் பொருந்திய‌ தொழில்நுட்பம் அல்லது இடைப்பட்ட தொழில்நுட்பம் பற்றிக் கண்டோம். அதற்கு முன் வாணிபத்தின் கைப்பாவையாக எவ்வாறு தொழில்நுட்பம் என்னும் போர்வாள் ஆளுமைக்காகச் செலுத்தப் படுகிறது என்றும் கண்டோம். வாணிபத்தின் லாப வெறி இல்லையேல் தொழில்நுட்பம் எவ்வாறு மிகுந்த நன்மை பயக்கும் என்பதைப் பொருந்திய தொழில்நுட்பத்தைப் பற்றிய எடுத்துக்காட்டுகளில் கண்டோம். எளிமையாய் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முற்படும் தொழில்நுட்பம், மிகக் குறைந்த முதலீட்டில் பல லட்சம் ஏழைகளுக்கு உதவி செய்ததைப் பார்த்தோம். இக்கட்டுரை எழுதும் வேளையில், மத்திய அரசு வரும் ஆண்டிற்கான நிதியறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 8 முதல் 8.5 விழுக்காடு வளரும் என்ற அடிப்படையில் வருவாய் எதிர்பார்த்துச் செலவைத் திட்டமிட்டிருக்கிறார்கள். மத்திய அரசின் தலைமைப் பொருளியல் ஆலோசகர் திரு. அரவிந்த் சுப்பிரமணியன், “இந்த வளர்ச்சி இய‌லாவிட்டாலும் அரசின் வருவாய் பெருமளவில் பாதிக்கப் படாது” என்று கருத்துக் கூறியிருக்கிறார். விலைவாசி ஏற்றத்தாலேயே வளர்ச்சி இலக்கின் பாதி எட்டப்பட்டு விடும் என்று ஒப்புக் கொண்டுள்ளார் !

இந்த நிதியறிக்கையைப் பற்றிப் பலரும் பல விமர்சனங்கள் செய்கையில், இதன் அடிப்படைத் திசையை யாருமே கேள்வி கேட்கவில்லை. மூன்று அடிப்படை அனுமானங்களின் பேரில் இந்த நிதியறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அவை:

  1. நமக்குப் பொருளாதார வளர்ச்சி தேவை. வளர்ச்சி இருந்தால்தான் வேலைகள் உருவாகும். வேலைகள் உருவானால் வறுமை ஒழிந்து விடும். (இதில் ஓரளவு உண்மை உள்ளது. ஆனால் எப்படிப்பட்ட வேலை என்பதில்தான் யாருக்கும் தெளிவு இல்லை).
  2. வள‌ர்ச்சிக்கு GDP எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியே குறியீடு , எனவே GDP யை (காகிதக் கணக்குகளைக் காட்டியாவது) வளர்த்த வேண்டும்.

    முழுக் கட்டுரை »

     
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org