செம்பருந்து:
இம்மாதம் நாம் காணவிருக்கும் பறவை செம்பருந்து. கருடன், கிருஷ்ண பருந்து, Brahminy Kite, Haliastur Indus என்ற பெயர்களை உடைய இவ்வழகிய பறவை பல இந்துக்களுக்குத் தெய்வத் தன்மை வாய்ந்தது. புராணங்களிலும் , சங்க இலக்கியங்களிலும் கருடனைப் பற்றி நிறையப் பாடல்கள் உள்ளன.
காணுமிடம்:
இவை இந்தியாவில் மட்டும் அல்லாது சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பாகிஸ்தான், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இதைக் காணலாம். சதுப்பு நிலங்களிலும், ஆறு கடலில் கலக்கும் பகுதிகளிலும் இவற்றை அதிகம் காணலாம்.
கேழ்வரகு குழி பணியாரம்
கேழ்வரகு, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும். 2 மணி நேரம் கழித்து மையாக அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி, 5 முதல் 6 மணி நேரம் புளிக்கவிடவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும். குழிப் பணியாரச் சட்டியைச் சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, மாவைக் குழிகளில் ஊற்றி, இரு புறமும் வேகவிட்டு எடுத்தால். சுவையான கேழ்வரகு குழிப் பணியாரம் தயார்!
இந்தக் குழிப்பணியாரத்தை குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள். மேலும் இது நார்ச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள சிற்றுண்டி. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு ஊட்டச்சத்து கொண்ட உணவு.