தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நவீன நாகரீகத்தின் உண்மைப் பரிமாணம்


திரு. சம்தாங்க் ரிம்பொன்சே, திபெத்திய பௌத்த துறவி மற்றும் சிந்தனையாளர். இன்று உலக அளவில் தலைசிறந்த காந்திய சிந்தனையாளர்களில் ஒருவராகவும், மாற்றுக் கோட்பாடுகளின் ஒரு முக்கிய ஆசானாகவும் திகழ்கிறார். முன்பு திபெத்திய அகதிகள் அரசின் பிரதம மந்திரியாக பதவி வகித்துவந்த இவர், இப்போது உலகம் முழுவதும், அமைதி, அஹிம்சை, த‌ற்சார்பு, இயற்கை விவசாயம், காந்திய சிந்தனை போன்றவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதைத் தன் முக்கிய கடமையாகக் கொண்டுள்ளார். இந்தக் கட்டுரை, சமீபத்தில் ‘சங்கமம்’ என்ற பெயரில், தில்லியில் சில சமூக சிந்தனையாளர்களின் கூட்டத்தை முன்னிருந்து நடத்திய திரு. ரிம்போன்சே ஆற்றிய துவக்க உரையின் சுருக்கம். நேரில் கேட்டு, தமிழில் தொகுத்து எழுதியது ராம்

மேலும் படிக்க...»

தலையங்கம்


பொருளியலில், “வாடகை வேட்டல்” (rent-seeking) என்றொரு சொல் உண்டு. இதன் பொருள், ஒரு நிறுவனமோ, குழுவோ, தனிநபரோ சமுதாயத்திற்கு எந்த வித மறுநன்மையும் செய்யாமல் தன்ன‌லமாகப் பொருள், பண‌ம் பெறத் தன் ஆற்றலைச் செலுத்துவது. 'நாடுகளின் வளம்' என்ற நூலை எழுதிய ஆடம் ஸ்மித், வருவாயை லாபம், கூலி மற்றும் வாடகை என்ற மூன்றாய்ப் பிரித்தார். இதில் கூலி என்பது உற்பத்திக்கான செலவுகளையும், வாடகை என்பது நிலம், நீர், ஆற்றல் போன்றவற்றிற்கு செய்யப்படும் செலவாகவும், லாபம் என்பது முதலுக்கும், முனைவுக்கும் ஆன ஊதியமாகவும் கொள்ளப்படுகிறது. வாடகை வேட்டல் என்பது வளங்களின்மேல் ஆளுமை செலுத்துதலும் அதற்கான திரைமறைவு வேலைகளையும் குறிக்கிறது. லாபம் வேட்டல் என்பது விற்போர் , வாங்குவோர் இருவருக்கும் பயன்படும் செயல். வாடகை வேட்டலோ ஒருபக்கப் பயனை மட்டுமே அளிக்கக் கூடியது. எதிர்நன்மை எதையும் அளிக்காதது.

மேலும் படிக்க...»

குமரப்பாவிடம் கேட்போம்

(1952 ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் தூதர் திரு. செஸ்டர் பெளல்ஸ் இந்தியாவுக்கான முதல் கட்ட உதவிகளுக்கான திட்டத்தை முன் வைத்த போது திரு. குமரப்பா எழுதியது)

இந்திய திட்டக் கமிஷனுடைய அங்கமான‌ “சமூகத் திட்டப்பணி நிர்வாகக் குழு” தனது திட்டங்கள் குறித்த வரைவினை (draft) வெளியிட்டுள்ளது. இந்த வரைவில் பிரசுரிக்கப் பட்டுள்ள விவரங்கள் மிகக் குறைவாகவும், மேலோட்டமாகவும் இருப்பதால் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய இயலவில்லை. ஆயினும் திட்டங்கள் குறித்த சில பரவலான கணிப்புகளை முன் வைக்க முடியும்.

முழுக் கட்டுரை »

 

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org