
முன்னுரை: விவசாயம், அதிலும் தற்சார்பான இயற்கை விவசாயம், ஒரு மிக வெற்றிகரமான தொழில் என்பதும், அதனால் மட்டுமே உலகில் உள்ள மக்களுக்குக்கு எல்லாம் நீடித்த, நிலைத்தன்மை உள்ள வேலை வாய்ப்பளிக்க முடியும் என்பதும், நம்மிடம் இருக்கும் நில,நீர் வளங்களைப் பொறுப்புடனும், சேவை மனப்பான்மையுடனும் நிர்வாகம் செய்தால், உழவனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மட்டுமன்றி, உலகத்துக்கே உணவளிக்கலாம் என்பதும் தாளாண்மையின் அடிப்படைக் கொள்கைகள். இன்று இக்கருத்தை அனைவரும் பகற்கனவு என்று ஒதுக்கி, மேம்படுத்துதல் என்னும் நவீன மாயமானைத் துரத்தி நகரங்களிற் சென்று நெஞ்சு புண் ஆகின்றனர்.்டாமா?