தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பாரம்பரிய நெல் - ஒரு பணப்பயிரே! - ஜெயக்குமார்


அறிமுகம்: ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, வேளாண் இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்துச் சென்னையில் ஒரு பள்ளியில் வேளாண் நிர்வாகியாக இருந்தவர் ஜெயக்குமார். 33 வயதே ஆன இவரும், இவரின் மனைவியும் சென்னையில் பணி புரிந்து கொண்டு , சொந்த வீடும், ஒரு பெண் குழந்தையுமாக கிராமத்து மக்கள் அனைவரும் கனவு காணும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர். மாதம் 30,000 வருமானத்தைத் துறந்து தன் சொந்த ஊரான மேலாநல்லூரில் தன் தந்தை நிர்வாகம் செய்து வரும் 20 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்வதாக ஒரு அதிரடி முடிவெடுத்து இருவரும் வேலையை விட்டு விட்டு வந்துள்ளனர்! 'கெடு முன் கிராமம் சேர்' என்ற நம் கொள்கையை வாழ்ந்து காட்டுபவர் இந்த இளம் விவசாயி. இவர் பரிசோதனை முயற்சியாக முதலில் 3 ஏக்கரில் நம் பரிந்துரைகளை ஏற்றுக் கிச்சடி சம்பா நெல்லைப் பயிரிட்டார். உழவன் விடுதலைக்காகப் பாடுபடும் தற்சார்பு இயக்கம் அதனை கிலோ ரூ.25 என்ற விலையில் கொள்முதல் செய்துள்ளது.

முழுக் கட்டுரை »

மாடல்ல மற்றையவை - ஜெய்சங்கர்


மாடுகளுக்கும் நம்மைப் போலவே அவ்வப்போது உடல் நலக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த நேரங்களில் இயன்ற அளவு நாம் கை வைத்தியம் செய்தாலே பெரும்பாலான சாதாரண உபாதைகள் நீங்கி விடும். சில பெரிய தொந்தரவுகளுக்கு மட்டுமே நாம், முதலில் நாட்டு வைத்தியரை நாட வேண்டும். அதுவும் பலிக்கவில்லையானால் கால்நடை மருத்துவரை அணுகலாம். பெரிய தொற்று வியாதிகளுக்கு கூட நாட்டு வைத்தியம் நன்றாக செயலாற்றுவதை சில மாதங்களுக்கு முன் தமிழ் நாட்டில் ஏற்பட்ட பரவலான கோமாரி நோய் பாதிப்பு எடுத்துக் காட்டியது. அரசு கால்நடைத் துறை கூட கோமாரி நோய் பரவுவதை தடுக்கவும், வந்து விட்டால் குணப்படுத்துவதற்கான சிகிச்சை மருந்துகளையும் நாமே எவ்வாறு தயாரித்து அளிப்பது என்று வானொலி, தொலைக்காட்சி மூலம் விளக்கினர்.

முழுக் கட்டுரை »

அடிசில் பார்வை - அனந்து


உலகிலேயே மிக அதிகமான உயிரிப்பன்மையம் (bio-diversity) உள்ள நாடுகளில் ஒன்றாக நம் இந்தியா கருதப்படுகிறது. உலகில் உள்ள 190 நாடுகளில், 17 நாடுகளில் மட்டும் 70 விழுக்காடு தாவர, விலங்கு உயிரினங்கள் உள்ளன. இப் பதினேழு நாடுகளும் 'பெரும்பன்மைய'(megadiverse) நாடுகளாகச் சிறப்புப் பெற்றுள்ளன. அவற்றுள் இந்தியாவும் ஒன்று! ஏறத்தாழ 91,000 விலங்குகளும், 45,500 தாவரங்களும் நம் நாட்டில் இனங்கண்டு கொள்ளப்பட்டுப் பட்டியிலிடப் பட்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையில் இன்னும் புதிய புதிய உயிரினங்கள் பட்டியிலிடப் பட்டுக் கொண்டே உள்ளன. இந் நாற்பத்தி ஐந்தாயிரம் தாவர இனங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிற்கு மட்டுமே உரித்தானவை.வேறு எங்கும் காணப் படாதவை. இன்னும் இனங்கண்டறியப் படாத 4,00,000 உயிரினங்கள் இந்தியாவில் இருக்கலாம் என விஞ்ஞானிகள் அளவிடுகின்றனர். இப்பன்மையம் 3500 கோடி

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org