தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பெருமழையில் சிறு துளிகள் - அனந்து


நவம்பர் 23 திங்கட்கிழமை, சென்னையில் 3 மணி நேரத்தில் 40 செ மீ மழை பொழிந்தது . அதே தினம், மதுராந்தகம் அருகே உள்ள நமது நண்பர்களின் கிராமத்தில் 55 செ மீ பொழிந்தது. அடுத்த நாள் எங்குமே நீர் தேங்கி இருக்கவில்லை. (அந்தக் கிராமத்தில் இவர்கள் மட்டுமே நெல் நடவு செய்திருந்தார்கள், மற்றவர்கள் வற‌ட்சி காரணமாகப் பயிரிடவில்லை). இருந்தும், அடுத்த மாதம் அறுவடைக்கான பயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்களது மண் விட்டிற்கும் 55 செ மீ மழையினால் எந்த பாதிப்பும் இல்லை. நீர், வழியில் இருக்கும் நீர் நிலைகளையெல்லாம் நிரப்பிவிட்டு, அதன் வழியில் சேர வேண்டிய இடத்திற்குச் சென்றடைந்தது.இதில் ஒரு பெரும் பாடம் சென்னைக்கு இருப்பது புரிகிறதா?

வருடத்திற்கு 100 செ மீ மழை, அதுவும் 100 மணி நேரத்தில் விழும் சென்னையில். அதற்கே அல்லோல கல்லோலப்படும் சென்னை; இப்படிச் சில மணி நேரங்களில் இவ்வளவு மழை என்றால்?

யார் குற்றம்?

சென்னை பல ஆறுகளின் கடைமடைப் பகுதியில் உள்ள ஒரு சம நிலப் பரப்பு. ஈரநிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள், இயற்கைக் கால்வாய்கள் கொண்ட நகரம். பல நூறு ஏரிகளும் நீர் நிலைகளும் கொண்டது. அவை எல்லாம் நிரம்பி, ஆயக்கட்டுகளை நிரப்பிப் பின் கடல் சேறுமாறு அமைந்தது. கூவத்திற்கு 75 ஏரிகளும் அடையாறுக்கு 450க்கு மேலான ஏரிகளும் தாம் நிரம்பிய பின் அதிகப்படியான நீரைக் கொடுத்தன. இவை தவிர வடிகால் வழிகள். அவை சரியாக சிறப்பாக இருக்கவில்லை என்றால் இந்த விரிந்த சம தளத்தில் சிக்கல்தான். இயற்கையாக அமைந்த வடிகால்களும் மனிதன் உருவாக்கியவையும் மிகவும் இன்றியமையாதது! ஆனால் அந்த நீர் நிலைகளும், வடிகால்களும் எங்கே?

முழுக் கட்டுரை »

செவிக்குணவு இல்லாத போழ்து - பத்மா


பொட்டுக்கடலை ராகி வடை

தேவையான பொருட்கள்


1.ராகி மாவு - 1 கோப்பை
2.பொட்டுக்கடலை - 1/2 கோப்பை
3.பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
4.பச்சை மிளகாய் - 1
5. கொத்தமல்லித் தழை - பொடியாக நறுக்கியது
6.இஞ்சி - சிறு துண்டு - பொடியாக நறுக்கியது

முழுக் கட்டுரை »

பட்டினந்தான் போகலாமாடி...? - பாமயன்


'கெட்டும் பட்டினம் போ' என்றொரு பழமொழி உண்டு. இது ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது உருவான பழமொழிகளில் ஒன்று. நகரங்கள் வரலாற்றில் பல்வேறு கட்டங்களில் பல்வேறு முறைகளில் உருவாகி வந்துள்ளன. பட்டினப்பாலை என்னொரு இலக்கியமே நமக்கு சங்க இலக்கியங்களில் ஒன்றாக உள்ளது. நகரங்கள் வளர்ச்சியின் அளவு கோலாகவும், நாகரிகத்தின் உச்சமாகவும், நவீனத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றன. இதன் பயனாக மக்கள், குறிப்பாக சிற்றூர்ப் புறங்களில் வாழ்வியல் நெருக்கடிக்கு ஆளாகின்றவர்கள் நகரத்தை நோக்கி இடம் பெயரத் தொடங்குகின்றனர்.

நகரமயமாக்கம் என்பது இன்றைய காலகட்டத்தில் உலகின் மிகவும் சிக்கலான ஒன்றாக மாறி வருகிறது. இந்திய மக்கள் தொகையில் 27 முதல் 30 விழுக்காட்டு மக்கள் நகரங்களில் வாழ்கின்றார்கள் என்றபோதிலும் இந்த எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் மாறும் தன்மையில் உள்ளது. தமிழகத்தில் கிராமங்களை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை 50 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.

நகரமயமாக்கம் வளர்ச்சியின் குறியீடாகப் பார்க்கப்பட்டாலும், அதனால் ஏற்பட்ட பொருளியல், சமூகவியல், சூழலியல் சிக்கல்கள் மிக அதிகமான அளவில் நாசத்தை ஏற்படுத்தி வருகின்றன. முறையற்ற திட்டமிடலாலும் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும் நெருக்கடியில் நகரங்கள் திணறுகின்றன.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org