அரிசியானது உலகின் மிக முக்கிய உணவுப் பயிராக இருக்கிறது. உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே முக்கிய உணவாக உண்கிறார்கள். இச்சூழலில், உலக உணவுப் பாதுகாப்பில் நெல் வேளாண்மையின் முக்கியத்துவம் அதிகரிப்பதில் வியப்பில்லை. நெல் வேளாண்மை என்பது வரலாற்றுக்கு முற்பட்டது என்பதில் ஐயம் ஏதும் இல்லை. இவ்வளவு ஆயிரம் வருடங்களாக ஒரே இடத்தில் விளைந்து கொண்டிருந்த நெல்லானது கடந்த 30 முதல் 40 வருடங்களில் விளையாமற் போவதற்கும், இயற்கைச் சீற்றங்களினால் அழிந்து போவதற்கும் நாம் தாளாண்மையில் தொடர்ந்து வெளிச்சமிட்டு வரும் வேதி வேளாண்மையும், புவி வெப்பமாதலுமே காரணங்கள். இதை அறிவியலாளர்களும், வேளாண் நிறுவனங்களும் பெரும் சீற்றத்துடன் எதிர்த்தாலும் உண்மை இதுதான். தொழில்நுட்பத்தைத் திணிக்கப் பிரதமர் முதல் நம் கிராமத்து விரிவாக்கப் பணியாளார் வரை துடியாய்த் துடிப்பதன் காரணம் அரசியலே அன்றி அறிவியல் அல்ல.
இதற்கிடையில் எல்லாவற்றையும் காசாக்க முனையும் வேளாண் வியாபாரிகளோ, வங்க தேசம் போன்ற நாடுகள் புவி வெப்பத்தால் பெரிதும் பாதிக்கப் படுகின்றன, எனவே வெள்ளத்தைத் தாங்கி வளரக் கூடிய மரபீனி நெல்லைத் தயாரிக்கிறோம் என்று ஒரு புறம் நம் இறையாண்மைக்குப் பாடை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் நம் வேளாண் பல்கலைக் கழகங்களும் அவற்றின் முனைவர்களும் புதிய புதிய வீரிய ஒட்டு ரகங்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் (அவர்கள் வெளியிட்ட நூற்றுக் கணக்கான நெல்ரகங்களில் எவ்வளாவு விவசாயிகளால் பயிரிடப் படுகின்றன என்பது யாருக் கேட்கத் துணியாத கேள்வி!).
உணவு உற்பத்தியின் அரசியற் பொருளாதாரம் - யார் வெல்வார்?
[கட்டுரையில் உள்ளவற்றில் அதிகப் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள், அருங்கலைச் சொற்கள், மற்றும் அயல்மொழிப் பெயர்ச் சொற்கள் போன்றவற்றின் ஆங்கில வடிவம் கட்டுரையின் இறுதியில் உள்ளது. மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன. - பரிதி (thiru.ramakrishnan@gmail.com)]
அதிக விளைச்சல் தரவல்லது வேதி வேளாண்மையா, உயிர்ம வேளாண்மையா? அனைத்து உழவர்களும் உயிர்ம வேளாண்மைக்கு மாறினால் பஞ்சம் தலைவிரித்தாடுமா? உணவு உற்பத்தி குறித்த சில பெரிய பொய்களை மக்கள் உணராதிருப்பதற்கே இது போன்ற வினாக்களும் விவாதங்களும் பரப்பப்படுகின்றன என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
அக்டோபர் 14 அன்று அமெரிக்காவின் ஐயோவா மாநிலத்தின் டெமாய்ன் நகரில் உணவு இறையாண்மைப் பரிசு வழங்கப்பட்டது. அமெரிக்காவின் தென் மாநிலங்களில் வாழும் கருப்பின உழவர்கள் சார்ந்த “தெற்கத்திய கூட்டுறவுகளின் கூட்டமைப்பு (தெ.கூ.கூ.)” மற்றும் ஆண்டுராசு நாட்டின் “கருப்பின உடன்பிறப்புகள்சார்ந்த கழகம் (க.உ.சா.க.)” எனும் இரண்டு அமைப்புகள் இவ்வாண்டுக்கான உணவு இறையாண்மைப் பரிசைப் பெற்றன.
நம்மிடையே உள்ள நாயகர்கள் தொடரின் நோக்கம் அல்லது இலக்கு, ஒரு சில தனி மனிதர்களை உயர்த்திக் காட்டி அவர்களுக்கு ஒரு தனியான சமூக அரியணை அளிப்பதல்ல. இவ்வுலகில் இன்னும் மனித நேயம், இயற்கை மற்றும் சூழலைப் பற்றிய அக்கறை தழைத்துக் கொண்டிருக்கிறது. பல இளைய பருவத்தினர் வெறும் பொருளாசையால் பாதிக்கப் படாமல், மிகையான திணிக்கப் பட்ட வேட்கைகளின்றி உண்மைத் தேடலுடன், இயற்கையை நேசித்து வாழ்கிறார்கள் என்பதை நம் தாளாண்மை மலர்கிறது வாசகர்களுக்கு தெரிவிக்கவே.
நாம் இத்தொடருக்காக புதுப் புது நண்பர்களைச் சந்திக்கும் காலைகளில், நமக்கு வாழ்வின் வேறுபட்ட பரிமாணங்கள் புலப்படுகின்றன. ஒவ்வொருவரும் மிக எளிமையுடனும் இயல்பான அடக்கத்துடனும் தம் எண்ணங்களையும், வாழ்க்கைப் பாதையின் உந்துதல்களையும் இலக்குகளையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒத்த சிந்தையில் செல்லும், வேறு புதிய ஒரு நண்பர் வட்டத்தை நமக்கு அறிமுகப் படுத்துகிறார்கள். இதுவரை நாம் கோவை மாவட்டத்தை ஒட்டி மட்டும் சுமார் முப்பதிற்கும் மேல் கருத்து ஒன்று பட்ட நண்பர்களை கண்டு கொண்டுள்ளோம். முதலில் ஆசிரியர் நம்மை இப்பணியை செய்ய கோரியபோது, நமக்குள் இருந்த ஐயங்கள் யாவும் அடித்தளமற்றவை என்று புரிபடுகின்றன.
இம்மாத நாயகர் வரிசையில் பிறர் பசி போக்கும் ஒரே குறிக்கோளை மட்டும் கொண்ட ஒரு இளைஞரை காணச் சென்றோம். அவரைச் சந்திக்க சில முறை அலைபேசியில் அழைத்தும் சரியாக நேரம் கிட்டவில்லை. ஒரு நண்பர் அவர் எப்பொழுதும் இருக்கும் ஒரு தொழிற்கல்வி கூடத்துக்கு நேரே செல்லும் படி அறிவுறுத்தினார். நாமும் கோவை நகரத்தின் மையத்தில் இருக்கும் அவ்விடத்துக்கு சென்றடைந்தோம்.
அக்கல்வி நிறுவனத்தின் உள்ளே நாம் சற்றும் எதிர்பாராத பரபரப்பான நிலையைக் கண்டோம். பற்பல ஊர்திகள் வந்த வண்ணம் இருந்தன. அங்குமிங்கும் நிறைய இளைஞர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அருகில் சென்று, திரு. பத்மனாபனை காண வந்திருப்பதாய் கூறினோம்.