தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


மீன்கொத்தி

Small Blue Kingfisher (Alcetho Atthis)

வைகாசி 2015 இதழில் நாம் கண்டது Halcyon Smyrnensis எனப்படும் வெண்கழுத்து மீன்கொத்தி. இவ்விதழில் அதை விடச் சிறியதான Alcetho Atthis என்ற அழகிய பறவையைப் பற்றிப் பார்ப்போம்.

தோற்றம்

குருவியின் அளவு இருக்கும். 16 செ.மீ முதல் 17 செ.மீ நீளம் இருக்கும். தலை மற்றும் உடலின் மேற்ப்பகுதி நீல‌ நிறத்தில் இருக்கும். கண்களைச் சுற்றியும், உடலின் அடிப்பகுதியும் துருப்போன்ற‌ ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். கழுத்துக்கடியில் ஆங்காங்கே வெள்ளையோடி இருக்கும். கால்கள் சிகப்பு நிறத்தில் இருக்கும். ஆண்களின் மூக்கு கருமை நிறத்திலும், பெண்களின் மூக்கின் மேல் பகுதி கருப்பு நிறத்திலும் அடிப்பகுதி சிகப்பு நிறத்திலும் இருக்கும்.

காணும் இடம்

குளம், குட்டை, வாய்க்கால், ஓடை ஆகிய இடங்களில் இவற்றைக் காணலாம். ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதிலும் இவற்றைக் காணலாம். வட‌ ஆப்பிரிக்காவிற்கு பனிக்காலப் பயணியாய்ச் செல்லும்!

உணவு

இவை அதிகமாக சிறு மீன்களையும், புழுக்கள், நீரின் மேல் மிதக்கும் பூச்சிகள், தும்பி ஆகியவற்றை உண்ணும்.

இனப்பெருக்கம்

மாசி முதல் ஆனி வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். கரையோரங்களில் உள்ள களிமண்களில் நீள‌ குழாய் போல் அமைத்து கூட்டைக் கட்டும்.அந்தக் குழாய் 60 முதல் 90 செ.மீ நீளம் இருக்கும். மீன் எலும்புகளை வைத்து அழகாகக் கூட்டை கட்டும். 5 முதல் 7 முட்டைகள் இடும். 21 நாட்களில் அடைகாக்கும். குஞ்சு பொரித்ததும் ஒரு நாளைக்கு சராசரியாக 12 முதல் 18 மீன்கள் வரை ஊட்டும். 25 நாட்களுக்குள் குஞ்சுகள் முழுமையாக வளர்ந்து பறக்க ஆரம்பித்துவிடும்.

குறிப்பு

குளத்திலோ அல்லது தண்ணீர் தேங்கி உள்ள இடத்திலோ மாசு உள்ளதா இல்லையா என்பதை இவற்றை வைத்து அடையாளம் காணலாம். மாசு இல்லாத குளத்திலோ அல்லது நீர் தேக்கங்களிலோ மட்டுமே மீன்களைப் பிடித்து உண்ணும்.

மீன் வேட்டையாடும் போது, நீரின் மேற்பரப்பில் வெய்யில் பிரதிபலித்துக் கண்கூசாத வண்ணம் இவற்றின் கண்களில் எண்ணெய் போன்ற ஒரு திரை அமைப்பு உள்ளது.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org