தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்குணவு இல்லாத போழ்து - பத்மா


பொட்டுக்கடலை ராகி வடை

தேவையான பொருட்கள்


1.ராகி மாவு - 1 கோப்பை
2.பொட்டுக்கடலை - 1/2 கோப்பை
3.பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
4.பச்சை மிளகாய் - 1
5. கொத்தமல்லித் தழை - பொடியாக நறுக்கியது
6.இஞ்சி - சிறு துண்டு - பொடியாக நறுக்கியது
7.சீரகம் - 1 சிட்டிகை
8.மிளகு - 1 சிட்டிகை (ஒன்றிரண்டாய்ப் பொடித்தது)
9.கருவேப்பிலை - சிறிதளவு
10.செக்கு எண்ணெய் - வடை பொரிக்க‌

செய்முறை

பொட்டுக் கடலையை சிறுஅரவையில் (மிக்சி) இட்டு ஒரே ஒரு திருப்புத் திருப்பவும். உடைந்து ரவை போல் இருக்க வேண்டும். மாவைப் போல் பொடியாகக் கூடாது.

பின் ராகி மாவுடன் பொட்டுக்கடலை ரவையையும் பிற பொருட்களையும் சேர்த்து வடை மாவு பதத்திற்குப் பிசையவும்.

வடையாகத் தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.

மழைக்காலத்தில் ருசிக்கச் சத்தான வடை தயார்!

குறிப்பு


1.மிக மெல்லிதாகத் தட்டினால் சிவந்து விடும்
2. பொட்டுக்கடலையுடன் ஒரு கைப்பிடி வேர்க்கடலையும் சேர்த்தால் வேறு ஒரு சுவை கிடைக்கும்.
3. பொடிதாய் நறுக்கிய பேரிச்சம்பழம், உலர்திராட்சை போன்றவற்றையும் சிறு அளவில் சேர்க்கலாம் ; குழந்தைகளுக்கு இச்சுவை மிகவும் பிடிக்கும்.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org