தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்கு உணவு இல்லாத போது


சாமை பேரீச்சை சுருட்டி (Roll)

பேரீச்சையில் உள்ள விதைகளை நீக்கி வேக வைத்து, ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதனை வாணலியில் போட்டு, அதனுடன் நாட்டுச்சக்கரை, வறுத்த தேங்காய் துருவல், நெய் சேர்த்து வதக்கி குழுக்கட்டைப் பூரணம் போல் செய்து கொள்ளவும். அகலமான பத்திரத்தில் 2 கோப்பை தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் சாமை மாவை சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். சப்பாத்திமாவு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து இறக்கவும்.

கை பொறுக்கும் அளவு சூடு இருக்கும்போதே மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின்னர் சப்பாத்தி போல வட்டமாக சற்று கனமாக இட்டு அல்லது தட்டிக் கொள்ளவும். அதன் நடுவில் கொஞ்சம் பூரண கலவையை வைத்து சுருட்டி, இட்லி பத்திரத்தில் பரப்பவும். பின் ஆவியில் பத்து நிமிடம் வேகவைத்து எடுத்து, சிறு சிறு வட்டங்களாக வெட்டி பரிமாறவும்.

முழுக் கட்டுரை »

உயிர்மூச்சே நஞ்சான அன்று - நினைவேந்தல் - அனந்து


1984; டிசம்பர் 3; நள்ளிரவு: அந்தப் பன்னாட்டு கம்பனியின் ஆலையிலிருந்து விஷ வாயு கசிகிறது. 25000 மக்கள் உயிரிழக்கிறார்கள். மேலும் 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இன்றளவும் , 3 தலைமுறைக்குப் பின்னும், பல குறைபாடுகளுடன் அங்கவீனமான குழந்தைகள் பிறக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் பல உடல் கேடுகளுடனும் பல நோய்களுடனும் பல்வேறு பாதிப்புகளுடனும் இன்றும் தவிக்கின்றனர். சுற்றுச்சூழல் கேடு வேறு.

எல்லா இடர்களிலும்போல் இதிலும் 99 சதவிகிதம் பாதிக்கப்பட்டு அவதிப்படுவது ஏழைகளே. அவர்களே மருத்துவ‌ வசதி கூட இல்லாமல், இன்றளவும் தூய குடி நீர் கூட இல்லாமல் தவிக்கின்றனர். அவர்கள் இந்த விஷ வாயுவை கக்கிய ரசாயன ஆலையின் அருகில் சேரிகளில் ஏழ்மையில் வாழ்ந்து வந்தவர்கள். 30 ஆண்டுகளாக போராடியும் இன்று வரை நீதி மறுக்கப்பட்டவர்கள் .

முழுக் கட்டுரை »

அடிசில் தீர்வு - அனந்து


அடிசில் தீர்வு - அனந்து

[இதுவரை பாதுகாப்பற்ற உணவுகளைப் பற்றித் தன் “அடிசில் பார்வை” தொடரில் விழிப்புணர்வு ஏற்படுத்திய அனந்து, இனி வரும் இதழ்களில் “அடிசில் தீர்வு” என்ற பெயரில் பாதுகாப்பான உணவை எப்படி நாம் கைக்கொள்வது, நம் சமையல் அறையை எப்படி நச்சற்ற நல்லறையாக்குவது என்று எழுதுவார். தற்சார்பு வாழ்வியலுக்கு நல்லுணவு என்பது இன்றியமையாதது ]

உணவு- நல்லுணவு, நஞ்சில்லா உணவு இவற்றை எப்படி அறிவது?

நமது நல்வாழ்விற்கும், வாழ்வாதாரத்திற்கும் அதி முக்கியமான உணவை நாம் எப்படி நஞ்சால் நிரப்பினோம். இன்று இவ்வளவு வியாதிகளில் உழன்று பல இன்னல்களை அனுபவிக்கிறோம். இன்றைய உணவு தயாரிப்பிலிருந்து, பதப்படுத்துதல் (processing), மற்றும் கொள்ளிருப்பு (shelf life) அதிகரிக்கும் பொதிவு (packing) என்று ஒவ்வொரு படியிலும் விஷம் கலக்கப்படுகிறது. பல நேரங்களில் நாம் அறியாமலும் நமக்கு தெரியாமலும் (தெரிவிக்கப்படாமலும்) கலக்கப்படுகிறது.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org