தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

ஊனுடம்பு ஆலயம் - நாச்சாள்


முகமும் நலமும்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி.

இந்தப் பழமொழியில் பல அர்த்தங்கள் புதைந்துள்ளன. முகம் அழகாகத் தோன்ற வேண்டுமானால் உடலின் உள்ளே உள்ள உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், பொருள் இதன் பட்டியலில் அழகும் இடம்பிடித்து விட்டது.

எனவே உடலை நன்கு பராமரித்தால்தான் இயற்கையான, உண்மையான அழகைப் பெறமுடியும்.

இன்றைய நவீன உலகில் உணவு மாறுபாடு காரணமாக முகமும், சருமமும் பாதித்த நிலையிலேயே பலர் காணப்படுகின்றனர். நம் உடலை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வதில் எவ்வளவு பாடுபட்டாலும் சில வேளைகளில் நம்மை அறியாமல் சில ஆபத்தான ரசாயனப் பொருட்களை அழகுக்காகப் பயன் படுத்திக் கொள்கிறோம். கூடவே அழையா விருந்தாளியாக வந்து சேர்கிறது 'ஓவ்வாமை'.

அதேபோல் எத்தனை கோடி சம்பாதித்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் முழுவதும் புண் வைத்துக்கொண்டு பட்டுத்துணியில் சட்டைபோட்டால் மனதில் தெம்பு இருக்குமா?. அகத்தில் வஞ்சனையும், பொறாமையும்,

முழுக் கட்டுரை »

மண் பயனுற வேண்டும்


பீடையிலாத‌து ஓர் கூடு கட்டிக் கொண்டு - ஜெய்சங்கர்

தற்சார்பு வாழ்வியல் என்பது மையப் படுத்தப்பட்ட சந்தையில் இருந்து வெளியேறித் தன் தேவைகளைத் தானேயோ அல்லது தன் அண்மையில் உள்ள கிராமப் பொருளாதாரத்தாலோ நிறைவு செய்ய முயற்சிப்பது. இதில் வெற்றி, தோல்வி என்பதற்கு இடமே இல்லை. வெற்றியும், தோல்வியும் பிறருடன் போட்டியிடுபவர்களுக்கு நிகழ்வது. தனக்குள் உந்தும் ஒரு விடுதலை வேட்கையால் ஏற்படும் தேடலின் வெளிப்பாடே தற்சார்பு வாழ்வியல் என்னும் முயற்சி. சீன ஞானி லாவோட்ஸே சொன்னது போல “உண்மையான பயணிக்கு அடையுமிடம் என்று ஏதுமில்லை; அவன் சென்று சேர்வதற்கும் அவசரப்படுவதில்லை”.

கடந்த 10 வருடங்களாக‌ இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். தற்சார்புக்கான தேடலில் முதலில் உணவை நாமே தயாரிக்கலாம் என்று சம்பளத்திற்கு வேலை செய்வதை விட்டு உழவனானேன். குடும்பம் சென்னையில்… பண்ணை எழுபது கிலோ மீட்டர் தொலைவில்… வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் தொடர் வண்டியில் பண்ணைக்கு பயணம்… இரண்டு வருடம் இவ்வாறு முயற்சி செய்த பின்னர் ஒன்று தெளிவானது! நமக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்வது சாத்தியம். ஆனால் சென்னை (நகர) வாழ்க்கை முறையை அப்படியே தொடர தற்சார்பு விவசாயம் பொருள் ஈட்டாது. பல கிலோ மீட்டர்கள் பயணம் செய்து பண்ணையை பராமரிப்பது உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்திற்கும் விரைவில் சோர்வை உண்டாக்குகிறது. எனவே, பண்ணைக்கு குடும்பத்துடன் பெயர்வதே அடுத்த கட்ட நடவடிக்கையானது.

முழுக் கட்டுரை »

மீட்டுருவாக்கும் உயிர்ம வேளாண்மை - பரிதி


(பகுதி 2 - சென்ற இதழ்த் தொடர்ச்சி)

ஒளிச் சேர்க்கையின் போது தாவரங்கள் (கரியமில வளி எனப்படும்) கரியீருயிரகையை உள்வாங்கிக்கொள்கின்றன. தாவரங்களும் பிற உயிர்களும் மூச்சு விடுகையில் கரியீருயிரகையை வெளிவிடுகின்றன; அது மட்டுமன்றி, ஆலைகள், போக்குவரத்து, வேளாண்மை போன்ற மாந்தச் செயல்பாடுகள் பெரிதளவு கரியீருயிரகையை வெளிவிடுகின்றன. ஒளிச் சேர்க்கையின்போது உள்வாங்கிக்கொள்வது அதிகமாக இருந்தால் மொத்தத்தில் வளி மண்டலத்தில் உள்ள கரியீருயிரகையின் அளவு குறைகிறது. இது வளிமண்டலத்தில் இருந்து கரியத்தைத் தனிமைப்படுத்தி ஒதுக்கிவைக்கிறது. (இவ்வாறு கரியத்தை வளிமண்டலத்தில் இருந்து மண்ணில் ஒதுக்கிவைப்பதன் மூலம் புவிச் சூழல் சூடேறுவது குறைக்கப்படுகிறது.) வளி மண்டலத்தில் இருந்து உள்வாங்கப்படும் கரியீருயிரகையைப் பயிர்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துதல், அவ்வாறு மண்ணில் சேமிக்கப்படும் கரியத்தை மீண்டும் வளி மண்டலத்திற்கு இழந்துவிடாதிருத்தல் ஆகியவை கரியத்தை ஒதுக்கப் பயன்படும் செயல்கள். இதைச் செய்வதற்குப் பல பாரம்பரிய வேளாண் உத்திகள் உள்ளன.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org