சாமை பேரீச்சை சுருட்டி (Roll)
தேவையான பொருட்கள்
- சாமை மாவு - 1 கோப்பை
- பேரீச்சம் பழம் - 10
- நாட்டுச்சக்கரை - 1 கோப்பை
- நெய்யில் வறுத்த தேங்காய் துருவல் - 1 கோப்பை
- உப்பு சிறிதளவு
செய்முறை
பேரீச்சையில் உள்ள விதைகளை நீக்கி வேக வைத்து, ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதனை வாணலியில் போட்டு, அதனுடன் நாட்டுச்சக்கரை, வறுத்த தேங்காய் துருவல், நெய் சேர்த்து வதக்கி குழுக்கட்டைப் பூரணம் போல் செய்து கொள்ளவும். அகலமான பத்திரத்தில் 2 கோப்பை தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் சாமை மாவை சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். சப்பாத்திமாவு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து இறக்கவும். கை பொறுக்கும் அளவு சூடு இருக்கும்போதே மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின்னர் சப்பாத்தி போல வட்டமாக சற்று கனமாக இட்டு அல்லது தட்டிக் கொள்ளவும். அதன் நடுவில் கொஞ்சம் பூரண கலவையை வைத்து சுருட்டி, இட்லி பத்திரத்தில் பரப்பவும். பின் ஆவியில் பத்து நிமிடம் வேகவைத்து எடுத்து, சிறு சிறு வட்டங்களாக வெட்டி பரிமாறவும்.
