வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


சிவப்பு மூக்கு ஆள்காட்டி

Red-wattled Lapwing (Vanellus indicus)

படம் உதவி: சாந்தனு குவேஸ்கர்

தோற்றம்

35 செ.மீ அளவு நீளம் இருக்கும். கண்களைச் சுற்றியும், மூக்கும் சிகப்பாக இருக்கும்.இரு கண்களிலிருந்து புருவம் போன்று சிகப்புக் கோடு மூக்கிடம் சேரும். தலை மேற்பகுதியும், கழுத்துப் பகுதியும் கருமை நிறத்தில் இருக்கும். கண் முதல் உடம்பு வரை வெள்ளை நிறத்தில் இருக்கும். சிறகின் மேற்பகுதி பழுப்பு நிறத்திலும், அதன் பிறகு வெண்மை நிறத்திலும், அதன் பிறகு கருப்பு நிறத்திலும் அழகாக அமைந்திருக்கும். சிறகின் அடிப்பகுதி வெள்ளை நிறத்திலும் வாலின் அடிப்பகுதியில் ஆங்காங்கே கருமை நிறத்திலும் இருக்கும். கால்கள் நீண்டு ஒல்லியாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். மூக்கு கூர்மையாகவும், சிகப்பாகவும் நுனியில் கருப்பு நிறத்திலும் இருக்கும். ஆண், பெண் ஒரே தோற்றத்தில் இருக்கும்.

முழுக் கட்டுரை »

நிகழ்வுகள் -அனந்து


திருச்சி: பாரம்பரிய விதைகள் மற்றும் உணவுத் திருவிழா

பசுமை சிகரம், சஹஜ சம்ருத்தா, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு, பாரத் பீஜ் சுவ‌ராஜ் மன்ச் (இந்திய விதைத் தற்சார்புக் குழுமம்), குடும்பம், எனப் பலரும் இணைந்து திருச்சியில் 2016 சனவரி 30 , 31 நாட்களில் ஒரு பெரும் இயற்கை விதைகள் கண்காட்சி மற்றும் இயற்கை உணவு திருவிழா நடத்தினர். திருச்சி யோகநாதனின் முழு முயற்சியில், தில்லை நகர் மக்கள் மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு இயற்கை மற்றும் மருத்துவப் பொருட்கள், நஞ்சில்லா உணவு, இயற்கை விதைகள், புத்தகங்கள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், இயற்கை பருத்தியினின்று கைத்தறியாக இயற்கை சாயம் பூசிய 'துலா' ஆடைகள், மிகவும் அரிதான மூலிகை செடிகள், மரக்கன்றுகள், கையால் இயங்கும் சிறு உழவுக்கருவிகள் என எல்லாம் இருந்தன. மக்கள் பெருமளவில் வந்து கலந்து கொண்டும், வாங்கியும் ஆதரித்தனர்.

இதில் பாமயன், அன்பு சுந்தரானந்தா,காசி பிச்சை, கொடுமுடி நடராஜன், பூச்சி செல்வம், அனந்து, அரச்சலூர் செல்வம், ஜெரோம், சஹஜா பிரவீன், மோகனகிருஷ்ணன், பார்திபன், புண்ணியமூர்த்தி, நெல் ஜெயராமன் என பலரும் கலந்துகொண்டு உரையாற்றியதை இரு நாட்களும் மக்கள் கடைசி வரை இருந்து கண்டு களித்தனர்.

முழுக் கட்டுரை »

செவிக்குணவு இல்லாத போழ்து


தினைப் பாயசம்

தேவையான பொருட்கள்

1.தினையரிசி - 1/4 கோப்பை
2.பாசிப் பருப்பு - 1 தேக்க‌ரண்டி
3. நெய் - 2 + 1 தேக்க‌ரண்டி
4.தேங்காய் துருவல் - 2 தேக்க‌ரண்டி
5.வெல்லம் துருவியது - 1/2 - 3/4 கோப்பை (தேவைக்கேற்ப)
6.பால் - 1 கோப்பை
7.உப்பு - சிட்டிகை
8.ஏலக்காய் பொடி - சிட்டிகை
9.முந்திரி திராட்சை - சிறிது

செய்முறை

1 கோப்பை தண்ணீர் சுட வைத்து அதில் துருவிய வெல்லம் சேர்த்து நன்கு கரையும் வரை கொதிக்க விடவும். கொதித்ததும் வடிகட்டி தனியே வைக்கவும்.

முழுக் கட்டுரை »

வாசகர் குரல்


வணக்கம் தை மாத இதழ் பார்த்தேன். படித்தேன். உழவர் தின விழாவை பற்றி எதிர்பார்த்தேன். சற்று ஏமாற்றம்தான். உணவும், உற்பத்தியும் பற்றிய பரிதியின் கட்டுரை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. உணவு உற்பத்தியின் அரசியலை நன்கு தெளிவு படுத்துகிறது. அனந்து அவர்கள் உலக வணிகத்தைச் சாடுவதுடன் உதார‌ணங்களுடன் (பாமாயில் இறக்குமதியின் பாதிப்பு) சொல்ல வேண்டும். வழிப்போக்கன் “கற்பதும் கசடும்” கட்டுரை கல்வியின் மாயத்தை உடைக்கும் கட்டுரை. ஆனந்த குமாரசாமி பற்றி சொல்ல வேண்டுகிறேன். மொத்தத்தில் தாளாண்மை காலதாமதம், தவித்து கொண்டு உள்ள எங்களுக்கு நிதானத்தை தருகிறது. கவிஞர் சாரல் கவிதை பக்கம் மன சுமையை குறைக்கிறது.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org