தலையங்கம்


நம் இந்தியா உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சிக் குடியரசு என்று நாம் மார்தட்டிக் கொள்கிறோம். இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்தால் அது உலகின் மிகப் பெரிய தேர்தல் என்று உலக ஊடகங்கள் அனைத்தும் உன்னிப்பாய்க் கவனிக்கும்படி உள்ளது. ஆனால் இன்னும் நம் மக்களாட்சி மிகவும் கவலைக்கிடமாக, முற்றிலும் விழிப்புணர்வற்ற வாக்களிப்போரின் கையில்தான் உள்ளது. ஒரு பெரிய அரசியலிய‌ல் அறிஞர் முன்னர் , ” பெரும்பான்மையான மக்கள் எழுத்தறிவு இல்லாத நம் நாட்டில், எழுதப்பட்ட‌ அரசியல் சாசன‌ம் கடைப்பிடிக்க‌ப்படுவதே தன் காலத்துக்கு முற்பட்டதாகத் தெரிகிறது” என்று எழுதினார்.

பாமர மக்களை அறியாமையிலேயே இருத்தி, இலவசங்களாலும், பணத்தாலும் அவர்களை மயக்கி, அரசே மதுபானம் விற்று, தொலைக்காட்சி, கிரிக்கெட், சினிமா போன்ற அபின்களால் இருக்கும் கொஞ்ச நஞ்ச சிந்திக்கும் திறனையும் மழுக்கி, இளைஞ‌ர்கள் எல்லாம் நவீன அலைபேசிகளில் ஆபாசப் படங்களைப் பார்க்க வசதியாய் 3 ஜி, 4 ஜி என்று நாடு முழுவதும் அலைக்கற்றை வலையைப் பரப்பி, அப்பாவித் தாய்மார்களையும், குடும்பத் தலைவிகளையும் 'ஆன்லைன் ஷாப்பிங்' என்று ஏமாற்றி, இணையத்தில் கடைவிரித்து, நுகர்ச்சி அரிப்பைத் தூண்டி விட்டு - மொத்தத்தில் யாருமே சிந்திக்காமல், ஒரு பெரும் போதையில் வல‌ம்வரச் செய்து கொண்டிருக்கின்றன‌ அரசும், ஊடகங்களும், பிற‌ அமைப்புக்களும் அவற்றை இயக்கும் சந்தைச் சக்திகளும்.

முழுக் கட்டுரை »

பசிப்பிணி குறித்த பத்துக் கதைகள் - பரிதி


உலக மக்களுக்குத் தேவையானதை விட அதிக அளவில் உணவு உற்பத்தியாகிறது. இருப்பினும் பசி, பட்டினி, பஞ்சங்கள் உலகைத் தொடர்ந்து வாட்டுகின்றன. அவற்றைக் குறித்த பல கட்டுக்கதைகளும் தவறான கருத்துகளும் உலகெங்கும் பரவியுள்ளன; 'பரவியுள்ளன' என்பதைக் காட்டிலும் 'பரப்பப்பட்டுள்ளன' என்று சொல்வதே சரியாக இருக்கும்! அத்தகைய கட்டுக்கதைகள் பத்து வகையானவை. அவை ஒவ்வொன்றும் தவறானவை என்பதைத் தக்க தரவுகளுடன் நிறுவியுள்ளனர் இரு ஆய்வாளர்கள். அவர்களுடைய நூல் 1986-இல் முதலில் வெளியாகிற்று. அதற்கு முன்பு தொடங்கி இன்று வரை சுமார் நாற்பது ஆண்டுகளாக அவர்கள் செய்த ஆய்வுகளைக் குறித்து அண்மையில் அவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரையின் சுருக்கத்தை இனிக் காண்போம்.

கட்டுக்கதை 1: உலக உணவு உற்பத்தி மிகக் குறைவு, மக்கள் தொகை மிக அதிகம்

உண்மை நிலை: உலகில் தேவையைக் காட்டிலும் மிக அதிக அளவு உணவு உற்பத்தியாகிறது. பற்றாக்குறை என்பது பொய். 1961 – 2013 காலக்கட்டத்தில் உலக மக்கள் தொகை இரண்டு மடங்குக்கும் அதிகமாகப் பெருகிற்று. ஆனால், இன்று உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் தேவையானதை விட ஐம்பது விழுக்காடு அதிக உணவு உற்பத்தியாகிறது. அதில் மூன்றிலொரு பங்கை நாம் வீணாக்குகிறோம். உணவு தானியங்கள், சோயா புரத்தம் ஆகியவற்றின் உற்பத்தியில் பாதிக்கும் அதிக அளவு விலங்குகளுக்கு உணவாகவும் ஊர்திகளுக்கு எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org