செவிக்குணவு இல்லாத போழ்து

தினைப் பாயசம்

தேவையான பொருட்கள்

1.தினையரிசி - 1/4 கோப்பை
2.பாசிப் பருப்பு - 1 தேக்க‌ரண்டி
3. நெய் - 2 + 1 தேக்க‌ரண்டி
4.தேங்காய் துருவல் - 2 தேக்க‌ரண்டி
5.வெல்லம் துருவியது - 1/2 - 3/4 கோப்பை (தேவைக்கேற்ப)
6.பால் - 1 கோப்பை
7.உப்பு - சிட்டிகை
8.ஏலக்காய் பொடி - சிட்டிகை
9.முந்திரி திராட்சை - சிறிது

செய்முறை

1 கோப்பை தண்ணீர் சுட வைத்து அதில் துருவிய வெல்லம் சேர்த்து நன்கு கரையும் வரை கொதிக்க விடவும். கொதித்ததும் வடிகட்டி தனியே வைக்கவும்.

1 தேக்க‌ரண்டி நெய்யில் முந்திரி திராட்சையை பொரித்து தனியே வைக்கவும்.

2 தேக்க‌ரண்டி நெய்யை வாணலியில் சூடாக்கி அதில் தினை, பாசி பருப்பு இரண்டையும் போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.

பிறகு அதில் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி , 3/4 கோப்பை தண்ணீர் (தினை:தண்ணீர் - 1:3) விட்டு 2 ஓசை வரும் வரை வேக விடவும். தண்ணீர் பதம் சரியாக இருந்தால் உதிர் உதிரக வெந்து வரும்.

இதனுடன் 1 கோப்பை பால் சேர்த்து நன்கு வேக விடவும். நன்கு கொதி வந்ததும் வெல்ல பாகு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும்.

அடுப்பிலிருந்து இறக்கி வறுத்த முந்திரி திராட்சை சேர்க்கவும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org