வாசகர் குரல்


வணக்கம் தை மாத இதழ் பார்த்தேன். படித்தேன். உழவர் தின விழாவை பற்றி எதிர்பார்த்தேன். சற்று ஏமாற்றம்தான். உணவும், உற்பத்தியும் பற்றிய பரிதியின் கட்டுரை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. உணவு உற்பத்தியின் அரசியலை நன்கு தெளிவு படுத்துகிறது. அனந்து அவர்கள் உலக வணிகத்தைச் சாடுவதுடன் உதார‌ணங்களுடன் (பாமாயில் இறக்குமதியின் பாதிப்பு) சொல்ல வேண்டும். வழிப்போக்கன் “கற்பதும் கசடும்” கட்டுரை கல்வியின் மாயத்தை உடைக்கும் கட்டுரை. ஆனந்த குமாரசாமி பற்றி சொல்ல வேண்டுகிறேன். மொத்தத்தில் தாளாண்மை காலதாமதம், தவித்து கொண்டு உள்ள எங்களுக்கு நிதானத்தை தருகிறது. கவிஞர் சாரல் கவிதை பக்கம் மன சுமையை குறைக்கிறது.

ப.தி. ராசேந்திரன் கலச‌பாக்கம், திருவண்ணாமலை

நாயகர்கள் தொடர் மிகுந்த நம்பிக்கையூட்டுவதாகவும், புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்

- நிஷா, கோவை

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org