தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அடிசில் தீர்வு - அனந்து


சோகாப்பர் பல்லிழுக்குப் பட்டு ...

அச்சம் என்பது ஒரு மிக வலுவான உந்து சக்தி. அதிலும் நம் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகிவிடும் என்றால் பெற்றோர் இடறியடித்துப் போய் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இதை விளம்பர நிறுவனங்கள் முழுமையாய்ப் பயன்படுத்திக் கொள்கின்றன. உங்கள் குழந்தைக்கு சொத்தைப்பல், பற்குழி வராமல் எங்கள் பற்பசை 24 மணிநேரம் பாதுகாக்கிறது; இதில் அந்த பார்முலா இருக்கிறது, அது பல்டாகடர்களால் பரிந்துரை செய்யப்பட்டது, அது, இது, அப்படி, இப்படி என்று நம்மை மூளைச் சலவை செய்யும் விளம்பரங்கள்.

இந்த விளம்பரங்களுக்காகப் பல கோடிகள் சம்பளம் பெற்றுக் கொண்டு, மெத்தப் படித்துப் பல டாக்டர் பட்டங்கள் பெற்ற டென்டுல்கர்களும், ஷாருக்குகளும், விஜய்களும் கண்ட பற்பசையையும் நமது பிரஷில் ஆரம்பித்து அக்குள் வரை போட்டுக்கொள்ள சொல்லுவார்கள். தெருக்கோடிகளில் புரளும் நாமும் இந்த “விஞ்ஞானி”களின் பேச்சை நம்பி ஏமாறுகிறோம்!

முழுக் கட்டுரை »

செவிக்குணவு இல்லாத போழ்து - பயணி


முன்குறிப்பு

காவிரிக் கடைமடைப் பாசனப் பகுதிகளான திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் குறுவை (நெல்), சம்பா (நெல்) , நவரை (பாசிப்பயறு (அ) உளுந்து) என்று மூன்று போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பரப்பின் பெரும்பகுதி கடுமையான களிமண் பூமியே. காவிரி நீர் சரியாக வராவிடினும் இப்பழக்கத்தை விட முடியாமல் அல்லது வேறு பயிர் சாகுபடி செய்ய முடியாமல் உழவர்கள் நிலத்தடி நீரை இறைத்துக் குறுவை சாகுபடி செய்கின்றனர். பலகோடி லிட்டர் தண்ணீரையும் பல கோடி யூனிட் மின்சக்தியையும் வீணடித்து TKM-9 AST 16 போன்ற மோட்டா ரக நெல் விளைவித்து அதை சொற்ப‌ லாபத்தில் வியாபாரிக்கு விற்று இப்போது நிலத்தடி நீரின் நிலை 120 அடி முதல் 180 அடி வரை போய் களர்-உவர் தன்மையுடன் விளைச்சலுக்கே உத்தரவாதமின்றி இருக்கின்றது. இச்சூழலில் மாற்றுப் பயிர்களை முயற்சிக்கலாம் என்று நண்பர் ஜெயக்குமாரின் வயலில் காணி நிலத்தில் (1.33 ஏக்கர்) மக்காச்சோளம் பரிசோதனைப் பயிராகச் செய்யப்பட்டது. மக்காச்சோளம் எந்தப் பெரிய பராமரிப்பும் இன்றி 450 கிலோ விளைந்தது. இதை அப்படியே வியாபாரிக்கு விற்றால் உழக்குக் கூட மிஞ்சாது என்பதால் தாளாண்மை அதை கிலோ 40 ரூபாய்க்குக் கொள்முதல் செய்து வைத்துள்ளது. இப்போது அதில் என்னென்ன உணவுப்பண்டங்கள் செய்யலாம் என்னும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். அதில் ஒன்றுதான் இன்று நாம் காண்பது. தாளாண்மை சமையல் குறிப்பு அச்சிடுவதும் கூட உழவன் விடுதலையைக் கருத்தில் கொண்டே!

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org