தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பற‌வைகளைப் பாருங்கள் - சகி


லோட்டன் தேன்சிட்டு

பின்பனிக்காலத்தில் இளவேனில் பிறக்கையில் (தை-மாசி) முருங்கை பூக்களைச் சொரிந்து தள்ளும். அங்கு இந்த அழகிய தேன்சிட்டு அதிகமாகக் காணப்படும். பூக்களில் உள்ள தேன், மகரந்தம் மற்றும் பூச்சிகளை விரும்பி உண்ணும்.

தோற்றம்

சிட்டுக்குருவியின் அளவில் (13 செ.மீ) இருக்கும். ஆண் பறவை கரும் ஊதா வண்ணத்தில் மேல்பகுதி முழுவதும் மினுமினுக்க அங்கும் இங்கும் தாவிக் கொண்டு இருக்கும். பெண் பறவை உடலின் மேல் பகுதி அழுக்குப் பழுப்பாகவும் அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கும். இதை ஊதாத் தேன்சிட்டுடன் எளிதில் குழப்பிக் கொள்வர். இதன் வேறுபாடு இதன் கொடுவாள் போன்ற நீண்ட பிறை மூக்குதான்.

காணும் இடம்

தென்னிந்தியா மற்றும் இல‌ங்கையில் மட்டுமே இவற்றைக் காணலாம். பூமரங்களில், பூங்காக்களில் இருக்கும்.

உணவு

பூக்களில் உள்ள தேன், மகரந்தம், சிலந்திகள் மற்றும் பூச்சிகளை விரும்பி உண்ணும்.

இனப்பெருக்கம்

மற்ற தேன்சிட்டுகளில் இருந்து கூடு கட்டுவதில் வேறுபடும். பிற தேன்சிட்டுக்கள் தொங்கும் கூண்டைக் கட்டும். நம் தேன்சிட்டு, சிலந்தி வலை, மரப்பட்டைகள், நார்கள், கம்பளிப்பூச்சியின் புழுக்கை போன்றவற்றைக் கொண்டு கூட்டை ஒரு வகைச் சிலந்தியின் வலைக்குள் ஒரு உருளை வடிவத்தில் கட்டும். பெண்தான் கூடு கட்டும்; ஆண் துணைசெய்யும். 2 முட்டைகள் இடும்; 15 நாட்கள் அடை காக்கும் பருவம்.

பிற தகவல்கள்

  1. ஆண் பெண் பெரும்பாலும் தனித்தனியாகவே பறக்கும். மற்ற தேன்சிட்டுக்கள் இணையுடன் பறக்கும்.

  2. இலங்கையில் டச்சுக் கவர்னராய் இருந்த ஜான் கிடியன் லோட்டன் என்பவர் பீட்டர் கார்னலிச் டி பிவரே என்னும் ஓவியரை, இலங்கையின் இயற்கை வரலாற்றைக் குறிக்குமாறு பணித்தார். அவர் நினைவாக இப்பறவை லோட்டன் தேன்சிட்டு என்று அழைக்கப் படுகிறது.
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org