தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

கவிதைப் பக்கம் - கவிஞர் சாரல் (அர.செல்வமணி)


எண்ணிலாச் சேதிபல கிடைக்குமதில் தானே!

வானமகள் உடன்பிறப்பாம் மண்மகளை நினைத்தாள்
வளமழையாய்க் கீழிறங்கி மண்ணுயிரை நனைத்தாள்
வான்மழையால் உயிரினங்கள் மகிழ்ந்தென்றும் உலவும்
வண்ணவண்ணக் காட்சிபல மண்ணெங்கும் நிலவும்
கானெங்கும் விதைபலவும் கண்விழித்தே அரும்பும்
களிவண்டோ தேனுண்ணக் கள்மலரை விரும்பும்
கானமிடும் புள்ளினங்கள் கரையுமொலி வெள்ளம்
கண்டுவந்த மகிழ்ச்சியிலே கரைபுரளும் உள்ளம்

சிறுகொடிகள் வழியெங்கும் விரித்திருக்கும் மெத்தை
சீராகப் படர்ந்தளிக்கும் தெவிட்டாத வித்தை
சிற்றிலைகள் இடையினிலே வீற்றிருக்கும் மலர்கள்
சேர்ந்திணைந்த காட்சியிலே கிறங்கிமனம் மலியும் (நிறையும்)
அற்றதின்று குழந்தைமனம் அழகுணரும் நாட்டம்
அடக்குமுறைக் கல்வியினால் அளவில்லா வாட்டம்
உறுதுணையாம் உழவின்றி உருப்படுமோ வாழ்வே
உணர்த்தாத கல்வியினால் உலகிலினித் தாழ்வே

பிஞ்சுமனம் மண்கிளற எந்நாளும் விரும்பும்
பிறகதிலே பணிசெய்யப் பேருவகை அரும்பும்
கொஞ்சமிடம் பள்ளிகளில் கொடுத்துவிட்டால் போதும்
குழந்தைமனம் திட்டமிடக் கூடியலை மோதும்
அஞ்சாமல் இணைந்தொன்றாய் அனைத்தையுமே கற்பார்
அழகாகச் செடிவளர்த்தே அகமகிழ்ந்து நிற்பார்
எஞ்சாதோ மகிழ்வங்கே இயற்கையழ காலே
எண்ணில்லாச் சேதிபல கிடைக்குமதில் தானே!

(கார்த்திகை-November 2014, மார்கழி-December 2014 இரண்டு தாளாண்மை இதழ்களிலும் பின் அட்டையில் உள்ள பாடல்களில் ஆங்காங்கு பல வரிகள் இடம் மாறியுள்ளன. தவறுக்கு வருந்துகிறோம். திருத்தப்பட்ட பாடல்கள் தேவைப்பட்டால் மின்னஞ்சல் மூலம் info@kaani.org அல்லது குறுஞ்செய்தி மூலம் 9965552252 க்குத் தெரிவிக்கவும்.http://kaani.org என்ற இணையதள வெளியீட்டில் சரி செய்யப் பட்டுள்ளன‌ )

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org