தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி

அரசவால் ஈ பிடிப்பான்:

(Asian Paradise Fly-catcher - Terpsiphone Paradise) இந்த மாதம் நாம் காண்பது ஒரு மிக அழகிய பறவை. Passerine என்ற பிரிவைச் சேர்ந்தது; அதாவது கால்களில் மூன்று விரல்கள் முன்புறமும், ஒரு விரல் பின்புறமும் அமைந்திருக்கும். அதிகம் பாடுவதும், அழகிய நிறங்கள் கொண்டதும் ஆனது இப்பறவை.

காணுமிடம்:

அதிகமாக மத்திய மற்றும் தென் இந்தியாவிலும், மத்திய வங்கதேசத்திலும் , மியான்மரின் தென்மேற்கிலும் , இலங்கையிலும் இவற்றைக் காணலாம். அடர்த்தியான தோப்புகளிலும், காடுகளிலும், இவை தென்படும்.

மேலும் படிக்க...»

செவிக்கு உணவு இல்லாத போது

சாமை முறுக்கு

சாமை மாவு, கடலை மாவு, எள்ளு, சீரகம், சிறிது எண்ணெய், பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சிறிது தண்ணிர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும். முறுக்கு அச்சில் பிசைந்த மாவைப் போட்டு முறுக்குகளாகப் பிழிந்து வைத்து கொள்ளவும். வாணலியில் முறுக்கு பொரிப்பதற்குத் தேவையான செக்கு எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் பிழிந்த முறுக்கைப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான முறுமுறு சாமை முறுக்கு தயார்.

மேலும் படிக்க...»

 

அடிசில் பார்வை - அனந்து


வெல்லும் வெல்லமும் கொல்லும் சீனியும்

கடந்த இதழில் சர்க்கரையின் இனிப்பு மற்றும் கசப்பான வரலாற்றைக் கண்டோம். இந்த மாத அடிசில் பார்வையில், வெள்ளைச்சீனியின் அழகான தோற்றத்திற்குள் ஒளிந்திருக்கும் தீமைகளைக் காண்போம்.

சமீபத்தில் ஒரு இருதய மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, இருதய மற்றும் சர்க்கரை நோய் கொண்ட எனது தந்தைக்கு இரும்பு சத்து கம்மியாக இருப்பதை பற்றியும் அவருக்கு மாத்திரை இல்லாமல் இரும்பு சத்தினை கூட்ட ஏதாவது இயற்கை உணவினை பரிந்துரை செய்யுமாறு கோரினேன். அதற்கு அவர் சில பழங்களை கூறத்தொடங்கியதும், சர்க்கரை நோய் உள்ளதை நினைவூட்டினேன். உடனே அவர் இரும்பு சத்து வேண்டுமென்றால் சர்க்கரை நோயாளிகளுக்குக் கீரையும், வெல்லமுமே சிறந்த இயற்கை உணவுகள் என்றார்! ஆம் வெல்லம்!!

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org