தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


இரண்டு மாதங்களுக்கு முன், 5 மாநில சட்டமன்றத் தேர்தலிலும் படு தோல்வி அடைந்த பின், மத்திய அரசில் சூழல் மற்றும் வனத்துறையின் அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருடைய பொறுப்பு பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சரான வீர்ப்ப மொய்லிக்குக் கூடுதல் பொறுப்பாகக் கொடுக்கப் பட்டது. சூழல் அழிவை மிகவும் ஏற்படுத்தும் பெட்ரோலியத் துறையின் அமைச்சர் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பொறுப்பில் அமர்வது பூனையைப் பாலுக்குக் காவலாய்ப் போடுவது போலத்தான் என்று பொருளாதார மேதையான நம் பிரதமர் அறியாதது அல்ல. எனினும், மீண்டும் ஆட்சிக்கு வருவோமோ இல்லையோ, இருக்கும் காலத்தில் நம் முதலாளிகளுக்கு, முடிந்தவரை, நம்மாலானதை விசுவாசமாகச் செய்து விடுவோம் என்ற உந்துதலில்தான் இவ்வேற்பாடு செய்யப் பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

மேலும் படிக்க...»

குமரப்பாவிடம் கேட்போம்

அந்நிய முதலீடு தேவை என்று மேலை நாடுகளில் போய்க் கையேந்தும் கேவல நிலைக்கு நம் நாட்டை ஆட்சியாளர்கள் த‌ள்ளி விட்டனர். ஆனால், இயந்திர மயமாக்கல், மையப் பொருளாதாரம் ஆகியவற்றின் தீமைகளைத் தெளிவாக 60 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துரைத்த ஒரு மாபெரும் பொருளாதார மேதையை நாம் பாடப் புத்தகங்களிலோ, ஊடகங்களிலோ அறிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை. திட்டமிடுவோர் பிடிவாதமாகக் கண்ணை மூடிக்கொள்ளும் காலம் என்று மாறுமோ? - ஆர்

முழுக் கட்டுரை »

 

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org