தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நிரம்பிய நூல் - ராம்


1. தாய்மைப் பொருளாதாரம்
எகாந்திய பொருளியல் அறிஞர், ஜே.சி. குமரப்பா கட்டுரைகள், தமிழில் ஜீவா பனுவல் சோலை வெளியீட்டகம், டிசெம்பர், 2013, விலை ரு. 150/- இன்றய பொருளாதார சூழல், ‘எத்தத் தின்னா பித்தம் தெளியும்’ என்கின்ற நிலையில் உள்ளது நாம் அறிந்ததே. உலக வர்த்தகம் சார்ந்த, நிலையில்லா, நிரந்தரத் தன்மையில்லா, ஏதிர்காலமில்லாத பொருளாதார ஏற்பாடு வெறும் ஊட‌கங்களை கொண்டும், ராணுவ உதவியுடனும், உலகமெல்லாம் பரவி உள்ளது. ஜனநாயகமில்லாத நாடுகளில் இது நேரடியாகவும், ஜனநாயக நாடுகளில் மறைமுகவாகவும் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில், உலக அளவில், மாற்றுப் பொருளியல் கோட்பாடுகளை சில அறிஞர்களும், அரசாங்கங்களும் தேடி வருகின்றன. தமிழகத்தின் இருபதாம் நுற்றாண்டில் தோன்றிய சிந்தனயாளர்களில், தலைசிறந்த பொருளியல் வல்லுநர் - காந்தியால், “நமது கிராமப்புற தொழில்களின் முனைவர்” (Doctor of Village Industries) என்று வருணிக்கபட்டவ‌ர் - திரு. கும‌ரப்பா ஆவார். இவரது எழுத்துக்களில் உள்ள எளிய ஆனால் ஆழ்ந்த‌ பொருளியல் கோட்பாட்டினை, இந்தப் புத்தகம் பல கட்டுரைகளின் வாயிலாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

முழுக் கட்டுரை »

புதிய புலவர்கள்

பால் நினைந்து ஊட்டும் தாயினும் - பாபுஜி

சாண்டோஸ் (Sandoz) என்கிற சுவிஸ் பன்னாட்டு மருத்துவ நிறுவனம் 1981 இல் அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு துறை (FDA) இடம் இருந்து பார்லோடேல்(Parlodel) என்கிற ஒரு மருந்தை சந்தைப்படுத்த அனுமதி பெற்றது. FDAவின் அனுமதி என்பது ஒரு மருந்தின் தரம் மற்றும் பயன்பாட்டை அங்கீகரிக்கும் ஒரு முத்திரை போன்றது. இது அமெரிக்காவில் மருந்துகளை விற்கும் எந்த ஒரு நிறுவனமும் கட்டயமாகப்பெற வேண்டிய ஒரு அனுமதி. பார்லோடேல் என்கிற மருந்து, குழந்தை பெற்றதும் தாய்ப்பால் கொடுக்க விருப்பமில்லாத அன்னைகளுக்கு, தாய்பால் சுரக்காமல் செய்கின்ற ஒரு மருந்து (எதற்குத்தான் மருந்து என்று இல்லை போலும்…). இந்த மருந்தினை அனேக அமெரிக்க தாய்மார்கள் தங்களுக்கு குழந்தை பிறந்ததும் உட்கொள்ள தொடங்கினர். ஆனால் அவர்கள் கூடிய சீக்கிரமே நீதிமன்றப்படிகள் ஏற வேண்டிய கட்டாயத்திட்குள்ளாகினர் (அதாவது அவர்கள் உயிரோடிருந்தால்!).

மேலும் படிக்க...»

 

முல்லை பெரியாறு அணை - ஒரு ஆய்வு


முல்லைப் பெரியாறு அணைத் திட்டம் வரலாற்று அடிப்படையில் சரியானதே! ரா. சீனிவாசன், முனைவர் பட்ட ஆய்வாளர், சட்டக் கல்லூரி, வெச்ட்மின்ச்ட்டர் பல்கலைக்கழகம், லண்டன்

R. Seenivasan, PhD candidate. School of Law, University of Westminster, London. r.seenivasan@gmail.com)

(தமிழில் பரிதி (thiru.ramakrishnan@gmail.com)

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org