தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி

அரசவால் ஈ பிடிப்பான்

(Asian Paradise Fly-catcher - Terpsiphone Paradise) இந்த மாதம் நாம் காண்பது ஒரு மிக அழகிய பறவை. Passerine என்ற பிரிவைச் சேர்ந்தது; அதாவது கால்களில் மூன்று விரல்கள் முன்புறமும், ஒரு விரல் பின்புறமும் அமைந்திருக்கும். அதிகம் பாடுவதும், அழகிய நிறங்கள் கொண்டதும் ஆனது இப்பறவை.

காணுமிடம்:

அதிகமாக மத்திய மற்றும் தென் இந்தியாவிலும், மத்திய வங்கதேசத்திலும் , மியான்மரின் தென்மேற்கிலும் , இலங்கையிலும் இவற்றைக் காணலாம். அடர்த்தியான தோப்புகளிலும், காடுகளிலும், இவை தென்படும்.

தோற்றம்:

வெள்ளை நிறத்திலும், துரு போன்ற சிகப்பிலும் (rufous red) இவற்றைக் காணலாம். தலையில் கிரீடம் போன்ற நீண்ட கொண்டையும் , உடலை விட மிக நீண்ட அழகிய வாலும் இவற்றின் அடையாளம். தலை கருப்பு நிறத்தில் இருக்கும். ஆண் பறவைகளுக்கு வால் இருக்கும். பெண்களுக்குக் கிடையாது. பெண்கள் சற்றுச் சிறியதாக இருக்கும்.

உணவு

பூச்சிகளே இதன் முக்கிய உணவு. எனவே உழவனின் நண்பன். இவை தங்கள் நீண்ட வாலுடன் வானத்தில் சுழன்று பறந்து தலைகீழாய் வட்டமிட்டுப் பூச்சிகளைப் பிடிக்கும் அழகைக் கண்டால் 'மனித்தப் பிறவியும் வேண்டுவதோ இந்த மாநிலத்தே' என்று பாடத் தோன்றும்.

இனப்பெருக்கம்

கோடை காலத்தில், வைகாசி முதல் ஆடி வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். ஆண், பெண் இரண்டு பறவைகளும் கூடு கட்டிவதிலும், குஞ்சுகளைப் பராமரிப்பதிலும் ஈடுபடும். கூட்டை அழகிய குவளைபோல் அமைக்கும். 3 முதல் 4 முட்டைகள் இடும். பெரும்பாலும் கருங்கரிச்சான் குருவியின் கூட்டின் அருகிலேயே கூட்டைக் கட்டும்.

இதன் குரல்தான் அதன் முக்கிய அடையாளம். கிரீச், கிரீச் என்று ப‌றந்து கொண்டே கத்தும். குரலால் இனங்கண்ட பின் பொறுமையாக மரத்தடியில் அமர்ந்தால் இதன் அழகை ரசிக்கலாம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org