தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நிரம்பிய நூல்

நோயான மருந்து - வழிப்போக்கன்

நவீன மனிதனுக்குத் தன் அறிவாற்றலின் மேல் அளவற்ற தன்னம்பிக்கை உருவாகி விட்டது. இயற்கையை அடக்கி ஐம்பூதங்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து அகலில் அகலும், அணுவில் அணுவும் தன் விரலசைப்பிற்கு ஆடச்செய்யக்கூடிய‌ ஆற்றலுடன் தான் இருப்பதாய் எண்ணுகிறான். பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் புத்தம் புதிய கலைகள் ,மெத்த அல்ல மிக விரைவாகவே, கிழக்கும், மேற்கும் எங்கும் வளர்கின்றன. அவசியத்திற்குத் தோன்றிய விஞ்ஞானம் இன்று மனிதனின் ஆளுமைப் பசிக்கும், ஆணவத்திற்கும் தீனியிடும் வியாபாரக் கருவி ஆகி விட்டது. “Appetite grows by what it feeds on” என்று ஷேக்ஸ்பியர் எழுதியது போல், ஆளுமை ருசியானது ஒரு யானைத் தீ நோய்போல் உண்ண உண்ணத் தீனி கேட்டுக்கொண்டே இருக்கிறது.பண வசதி என்பது சந்தையின்மேல் நமக்குள்ள ஆளுமையைப் பறைசாற்றுவதால், நுகர்ச்சி என்பது நாகரீகம் ஆகி விட்டது.

முழுக் கட்டுரை »

செவிக்குணவு இல்லாத போழ்து

சிறு தானியங்களில் நல்ல ஊட்டச்சத்தை உள்ளடக்கியது கம்பு. கோதுமை, மக்காச்சோளம் போன்றவற்றிற்கு இணையான புரதச் சத்தும் அவற்றை விட அதிக நார்ச்சத்தும் கொண்டது. மிக வளம் குறைந்த நிலங்களில் கூட விளைவதாலும், மானாவாரியாகப் பயிரிடத் தகுந்த பயிராதலாலும், கம்பு அதிகம் சாப்பிட்டால் அரிசி, கோதுமை போன்ற நீர்முழுங்கிப் பயிர்களின் தேவை குறைந்து சூழல் பாதுகாப்பு மேம்படும். கம்பில் வைட்டமின் பி, பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் போன்ற உடலுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இருக்கின்றன. சூழலிலும், உடல்நலத்திலும் அக்கறை உள்ள அனைவரும் தினம் ஒருவேளை உணவாவது சிறு தானியங்களால் தயாரித்ததாய் உண்ண வேண்டும்

மேலும் படிக்க...»
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி

மழைக்காலம் மிக இனிதானது. திக்குகள் எட்டும் சிதறிப் பாயும் மழை இவ்வருடம் ஏமாற்றி விட்டது. எனினும் மாசி மாதம் வந்ததும் காலைப் பனியின் பொழிவில், புல்லின் இதழ்களில் பூக்கும் பனித்துளியையும், விடிந்தும் விடியாத காலைப் பொழுதையும் மனம் ரசிக்க ஆரம்பித்தது. அதிகாலை, ஒரு நான்கு மணிபோல மிக இனிமையான இசை ஒன்று நம் காதில் விழுகிறது. “வைகறையாகுமுன் பாடி விழிப்புற்று” என்று பாரதி பாடிய வரிகள் நினைவுக்கு வருகின்றன. அந்த இனிய இசைக்குரிய நம் கலைநாயகன்தான் இன்றைய கதைநாயகன். குட்டு கரிச்சான், வண்ணாத்திக் குருவி,வீட்டுக் காகம், கறுப்பு வெள்ளைக் குருவி என்றெல்லாம் அடைமொழிகளை உடைய இச் சிறுபறவை, வசந்தம் பிறந்ததும் பாடத் துவங்கி விடும்.

மேலும் படிக்க...»
 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
s
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org