தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தற்சார்பு வாழ்வியல்

ஜனநாயகம் என்று அழைக்கப்படும் மக்களாட்சி என்பது மக்களே தங்களை ஆண்டு கொள்ளும் ஒரு வகைத் தன்னாட்சி என்ற மாயை உலகெங்கும் பரப்பப்பட்டுள்ளது. இத் தொடர் பரப்புரையின் விளைவால் உலகின் பெரும் பகுதிகளில் மாற்று ஆட்சிகளான‌ மன்னராட்சியும், பொதுவுடைமையும் பெரிதும் வலுவிழந்து விட்டன. உண்மையில் மக்களாட்சியில் நாம் நம்மை ஆள்வது இல்லை - நம்மை ஆளும் அதிகாரத்தைச் சிலரிடம் கொடுக்கிறோம் அவ்வளவே. அதில் தவறு செய்துவிட்டோமானால் திருத்திக் கொள்ளப் பல ஆண்டுகள் கழித்தே வாய்ப்புக் கிடைக்கிறது.இம்முறை தோற்றுக் கொண்டிருப்பதற்கான காரணம் நாம் தேர்ந்தெடுக்கக் கொடுக்கப்படும் தெரிவுகள்/விருப்பங்கள் எதுவுமே நமக்கு விருப்பமில்லாது இருப்பதுதான்.

மேலும் படிக்க...»
 

குமரப்பாவிடம் கேட்போம்

எந்த ஒரு அரசுக்கும் தெளிவான ஒரு கொள்கை என்பது நங்கூரம் போல் இன்றியமையாதது; இக்கொள்கை ஒரு வாழ்க்கைத் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தால் இன்னும் நலம். நம் தற்போதைய ஆட்சியில் இந்த அடிப்படைத் தேவையான கொள்கை முற்றிலும் இல்லவே இல்லை. இதன் விளைவு ஒரு வகையான “திரியும் கொள்கை” ஆகி ஒரு தவறிலிருந்து இன்னொரு தவறுக்குத் திரிந்து கொண்டிருக்கிறோம்.பெரும்பான்மையான நாடுகளில் ஒரு நிலைமையை படு மோசமாகக் கையாண்டால் அது ஆட்சி மாற்றத்தில் முடியும். ஆனால் மக்களிடையே, குறிப்பாக ஒரு பலம்வாய்ந்த பகுதியினரிடம், நற்பெயரைப் பெற்ற பிரதம மந்திரியை நாம் பெற்றிருப்பதனால், அர்சாட்சிக்கு எந்த பாதிப்பும் இன்றி, ஒரு பெரும்தவறிலிருந்து இன்னொன்றிற்குத் தாவிக் கொண்டிருக்கிறோம். எந்த ஒரு நாட்டிற்கும் இது ஒரு தீவிரமான இடைஞ்சலே. இது போன்ற செல்வாக்குப் பெற்றவர்கள், நிர்வாகிகளிடம் மதிப்பைப் பெறுவதற்காக, எதிர்க்கட்சியில் இருக்கவேண்டும். அதை விட்டு சீர்கெட்ட நிர்வாகத்தின் ஊழல்களை வெள்ளையடித்து மறைக்கும் கருவிகளாகக் கூடாது.

மேலும் படிக்க... »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
s
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org