தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பீடையிலாத‌தோர் கூடு - உழவன் பாலா

மண்ணால் வீடு கட்டுவது என்றால் வீட்டின் அனைத்து பாகங்களும் மண்ணாலேயே ஆனவை என்றும், மழை வலுவாகப் பெய்தால் கரைந்து விடும் என்றும், கரையானும், தேளும், பூரானும் வீட்டில் விளையாடும் என்றும் எல்லாம் நமக்குக் கற்பனைகள் தோன்றக் கூடும். ஆனால், நாம் செங்கல் வீடு என்றால், கூரை, ஜன்னல், கதவு, தரை போன்ற பலவற்றிற்கும் செங்கல் அல்லாத பொருட்களையே பயன்படுத்துகிறோம். செங்கல்லால் ஆன வீட்டிற்கு ஓட்டிலேயோ, கீற்றிலேயோ கூரை வேய்ந்தால் அதிலும் பூச்சிகள் வரக் கூடும். எனவே வீட்டை நாம் திட்டமிடுவதிலும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதிலும் கவனம் செலுத்தினால் மண்வீடும் கான்க்ரீட் வீடு போல் பாதுகாப்பாகவும், நளினமாகவும் ஒளிர முடியும். மண்வீடு என்று சொல்வதை விட மண்சுவர் வீடு என்று சொல்வதே பொருந்தும்.

முழுக் கட்டுரை »

விசும்பின் துளி - பாமயன்

சங்ககாலத்திற்குப் பின்வந்த களப்பாளர்கள் எனப்படும் களப்பிரர்கள் பற்றிய செய்திகள் குறிப்பாக வேளாண்மை பற்றிய செய்திகள் அவ்வளவாக இன்னும் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படவில்லை. இப்பகுதி இன்னும் ஆய்வுக்கான களமாகவே உள்ளது. இவர்களை அடுத்து அரியணைக்கு வந்தவர்கள் பல்லவர்கள் இவர்கள் ஆனாலும் காஞ்சியில் ஒரு பெரிய அரசன் இப்பல்லவர்களுக்கு முன்னமே இருந்துள்ளான். சிம்மவிஷ்ணு என்று கூறப்படும் ஒருவன் திடீரென பல்லவப் பேரரசை கி.பி. ஆறாம் நூற்றாண்டின் அமைப்பதற்கு முன்பாக இந்த புகழ் பெற்ற அரசன் இருந்துள்ளான். இவன் கரிகால் பெருவளத்தான் எனப்படும் திருமாவளவனைப் பாடிய புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணணார் என்பவரால் பாடப் பெற்றுள்ளான். இவன் பெயர் இளந்திரையன்.

மேலும் படிக்க... »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
s
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org