தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்குணவு இல்லாத போழ்து

கம்பு பணியாரம் - ஸ்ரீ

சிறு தானியங்களில் நல்ல ஊட்டச்சத்தை உள்ளடக்கியது கம்பு. கோதுமை, மக்காச்சோளம் போன்றவற்றிற்கு இணையான புரதச் சத்தும் அவற்றை விட அதிக நார்ச்சத்தும் கொண்டது. மிக வளம் குறைந்த நிலங்களில் கூட விளைவதாலும், மானாவாரியாகப் பயிரிடத் தகுந்த பயிராதலாலும், கம்பு அதிகம் சாப்பிட்டால் அரிசி, கோதுமை போன்ற நீர்முழுங்கிப் பயிர்களின் தேவை குறைந்து சூழல் பாதுகாப்பு மேம்படும். கம்பில் வைட்டமின் பி, பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் போன்ற உடலுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இருக்கின்றன. சூழலிலும், உடல்நலத்திலும் அக்கறை உள்ள அனைவரும் தினம் ஒருவேளை உணவாவது சிறு தானியங்களால் தயாரித்ததாய் உண்ண வேண்டும்

தேவையான பொருட்கள்

கம்பு 3 கோப்பை

அரிசி 1 கோப்பை

உளுந்து 1 கோப்பை + வெந்தயம் இரு சிட்டிகை (கம்பு, அரிசி, உளுந்து விகிதம் 3:1:1 என்று இருக்க வேண்டும்)

2 பெரிய வெங்காயம்

4 பச்சை மிளகாய் - 1 (காரத்தின் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளவும்)

4 பச்சை மிளகாய்

1 குடமிளகாய்

1 சிட்டிகை இஞ்சித் துருவல்

10 கறிவேப்பிலை இலைகள்

(மக்காச்சோளம் அல்லது பச்சை நிலக்கடலை -விரும்பினால்)

எண்ணெய் - பணியாரம் சுட‌

கம்பு பணியாரம் செய்முறை

சுத்தம் செய்யப்பட்ட கம்பை 12 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். அரிசியை 3 மணிநேரமும், உளுந்து+வெந்தயம் இவற்றை 1 மணி நேரமும் தனித்தனியாக ஊற வைக்க வேண்டும். தேவையான உப்பு சேர்த்து இவற்றை ஒன்றாக அரவை இயந்திரத்தில் (grinder) அரைக்கவும். வெங்காயம், மிளகாய், குடமிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி மாவுடன் கலந்து கொள்ளவும். மக்காச்சோளம்/நிலக்கடலை இவற்றை வேக வைத்து மாவில் கலந்து கொண்டால், இடையிடையில் கடித்துக் கொண்டு மிகச் சுவையாக இருக்கும்.

இந்த மாவை உடனடியாகப் பயன்படுத்தலாம். புளிக்கத் தேவையில்லை. வழக்காமான குழிப் பணியாரம் செய்வது போல் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். வெங்காயச் சட்டினியுடன் மிகச் சுவையாக இருக்கும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org