தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி

Brahminy Starling, Sturnia pagodarum

தோற்றம்

starling என்று அழைக்கப்படும் மைனா இனத்தைச் சேர்ந்தது. முகம், கழுத்து, உடல் பகுதிகள் செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். சிறகுப் பகுதி சாம்பல் நிறத்தில் இருக்கும். மூக்கு மற்றும் கால்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மூக்கின் பிற்பகுதி மற்றும் கண்களைச் சுற்றி நீல‌ நிறத்தில் இருக்கும். கண்களின் உட்புறம் வெள்ளை நிறத்தில் இருக்கும். தலையில் கருப்புக் கொண்டை இருக்கும். வால்களின் நுனியில் வெளிப்புறத்தில் வெள்ளை நிறத்திலும் , உள்புறம் கருப்பு நிறத்திலும் காணப்படும். இவைகள் பறக்கும் போது மிக‌ அழ‌காகத் தெரியும்.

காணும் இடம்

இந்தியா முழுவதும் இவற்றைக் காணலாம். கோடைகாலங்களில் இமயமலை மற்றும் பாகிஸ்தானிலும் காணலாம். பெரும்பாலும் இவை சிறிய காடுகளிலும், வயல் பகுதிகளிலும், பூங்காவிலும் தென்படும்.

உணவு

பெரும்பாலும் இவை நத்தை,பூரான்,சிலந்தி,புழுக்கள்,பூச்சிகள் போன்றவற்றை உண்ணும். அதுமட்டுமல்லாது இவை மஞ்சள் அரளி/தங்க அரளிப் பூக்களில் (Yellow oleander) உள்ள தேனைக் குடிக்கும், பழத்தையும் உண்ணும்.

இனப்பெருக்கம்

ஒருவனுக்கு ஒருத்தி போல வாழ்நாள் முழுவதும் ஒரே இணையோடு வாழும். இதன் இனப்பெருக்க காலம் பங்குனி முதல் புரட்டாசி வரை ஆகும். மரத்தின் வ‌ங்குகளிலோ கட்டிடங்களில் உள்ள ஓட்டைகளிலோ இவை கூடு கட்டும். வைக்கோல், காகிதம், உலர்ந்த இலை போன்றவற்றைக் கொண்டு கூடு கட்டும். 3 முதல் 4 நீல‌ நிற முட்டைகள் இடும். 12 நாட்களில் அடை காக்கும். 21 நாட்களுக்குள் குஞ்சுகள் பறந்து விடும்.

குறிப்பு

வடமொழியில் இதை சங்கரா என்று அழைப்பர். ஆங்கிலத்தில் இதை Brahminy என்று அழைப்பதன் காரணம் இதன் கொண்டை ஐயர்களின் குடுமியை போல இருக்கும் என்பதாலேயே!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org