தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்குணவு இல்லாத போழ்து - பத்மா


சாமை ஆப்பம்

தேவையான பொருட்கள்


1. சாமை அரிசி - 2 ஆழாக்கு (ஒரு ஆழாக்கு = 200 கிராம்)
2. இட்லி அரிசி - 2 ஆழாக்கு
3. உளுந்து பருப்பு - 1/2 ஆழாக்கு
4. வெந்தயம் - 1 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
6. பெரிய தேங்காய் - ஒரு மூடி
7. செக்கு நல்லெண்ணை - தேவைக்கேற்ப‌

செய்முறை

ஆப்பம் சுடுவதற்குச் சுமார் 9 மணி நேரம் முன்பு சாமை, அரிசி, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக‌ 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

அதன் பின் அரவை இயந்திரத்தில் இவற்றை ஆப்ப மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.

இம் மாவில் தேங்காயைப் பூவாகத் துருவிப் போட்டு 6 மணிநேரம் புளிக்க விட வேண்டும்.

ஆப்பச் சட்டியில் ஒரு புறம் தீயில் வேக விட்டு, மறு புறம் ஆவியால் வேகும்படி மூடி வார்த்துப் பொன்னிறமாக எடுக்கவும்.

தேங்காய்ப்பாலுடன் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும்.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org